திருமுறை 10 · 10.08.06 · 40

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நானவாதி தூலமே சூக்கப் பகுதிஅனதான ஐஐந்தும் விந்துவின் சத்திதனதாம் உயிர்விந்து தான்நின்று போந்துகனவா நனவில் கலந்ததுஇவ் வாறே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்நனவில் கனவுஓட நன்செய்தி யானதே.

3

செறியுங் கிரியை சிவதத் துவமாம்பிறிவில் சுகயோகம் பேரருள் கல்விகுறிதல் திருமேனி குணம்பல வாகும்அறிவில் சராசரம் அண்டத் தளவே.

4

ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்போதம் கலைகால நியதிமா மாயைநீதிஈ றாக நிறுத்தினன் என்னே.

5

தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்மாசகல் வித்தை நியதி மகாமாயைஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே.

6

ஆணவம் மாயையும் கன்மமு மாமலம்காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

7

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

8

உடல்இந் தியமனம் ஒண்புத்தி சித்தம்அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

9

தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்மற்றது உண்டிக் கன(வு)நன வாதலே.

10

நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்திதனலுண் பகுதியே தற்கூட்டும் மாயைநனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

11

ஆறாறில் ஐஐந்து அகல நனாநனாஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனாவேறான ஐந்தும் விடவே நனாவினில்ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே.

12

மாயையில் வந்த புருடன் துரியத்தில்ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்சேயகே வலவிந் துடன் சென்றக்கால்ஆய தனுவின் பயனில்லை யாமே.

13

அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மாஅதீதத் துரியம் அதனால் புரிந்தால்அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்முதிய அனலில் துரியத்து முற்றுமே.

14

ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே.

15

புரியட் டகமே பொருந்தல் நனவுபுரியட் டகந்தன்னில் மூன்று கனவுபுரியட் டகத்தில் இரண்டு சுழுத்திபுரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.

16

நனவில் நனவு புனலில் வழக்கம்நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமைநனவில் துரியம் அதீதத்து நந்தியே.

17

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்கனவினில் கண்டு மறத்தல் கனவாம்கனவில் சுழுத்தியும் காணாமை காணல்அனுமாதி செய்தலில் ஆன துரியமே.

18

சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகைசுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

19

துரிய நனவாம் இதமுணர் போதம்துரியக் கனவாம் அகமுணர் போதம்துரியச் சுழுத்தி வியோமம் துரியம்துரியம் பரமெனத் தோன்றிடும் தானே.

20

அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்அறிவுஅறி யாமை அடையக் கனவாம்அறிவுஅறிய அவ்வறி யாமை சுழுத்திஅறிவுஅறி வாகும் ஆன துரியமே.

21

தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டுஞானம் தனதுரு வாகி நயந்தபின்தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டுமேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலிட்டே.

22

ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயைஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே.

23

ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்ஈதென்று அறியும் இயல்புடை யோனே.

24

உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்நயப்புறு சத்தியும் நாதன் உலகாதிஇயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே.

25

சத்தி இராகத்தில் தான்நல் உயிராகிஒத்துறு பாச மலம்ஐந்தோடு ஆறாறுதத்துவ பேதம் சமைத்துக் கருவியும்வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.

26

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மைசாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.

27

மலக்கலப் பாலே மறைந்தது சத்திமலக்கலப் பாலே மறைந்தது ஞானம்மலக்கலப் பாலே மறைந்தனன் தாணுமலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே.

28

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்றுநகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்குவகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்துபகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.

29

கதறு பதினெட்டுக் கண்களும் போகச்சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்அதிர வருவதோர் ஆனையும் ஆமே.

30

நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்கனவகத் தேஉள் கரணங்க ளோடுமுனவகத் தேநின்று உதறியுட் புக்குநினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே.

31

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்சென்று துரியாதீ தத்தே சிலகாலம்நின்று பரனாய் நின்மல னாமே.

32

ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்தான்உலகு உண்டு சதாசிவ மாசத்திமேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகிமோனம் அடைந்தொளி மூலத்த னாமே.

33

மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்றவிண்டலர் தாமரை மேலொன்றும் கீழாகத்தண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே.

34

போதறி யாது புலம்பின புள்ளினம்மாது அறி யாவகை நின்று மயங்கினவேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறைசூதறி வாருச்சி சூடிநின் றாரே.

35

கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கேபொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானைவருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றானே.

36

ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்தான விளக்கொளி யாம்மூல சாதனத்துஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்குஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே.

37

உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஒதுங்கியவிண்நாட நின்ற வெளியை வினவுறில்அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்கண்ணாடி காணும் கருத்ததுஎன் றானே.

38

அறியாத வற்றை அறிவான் அறிவான்அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்அறியா தவத்தை அறிவானைக் கூட்டிஅறியாது அறிவானை யார்அறிவாரே.

39

துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்அரியன தூடணம் அந்நன வாதிபெரியன கால பரம்பிற்றுரியம்அரிய அதீதம் அதீதத்த தாமே.

40

மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்கேவல மாகும் சகலமா யோனியுள்தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.