திருமுறை 10 · 10.07.31 · 6

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

சீவன் எனச்சிவன் என்னவே றில்லைசீவ னார்சிவ னாரை அறிகிலர்சீவ னார்சிவ னாரை அறிந்தபின்சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்பணவிளக் காகிய பல்தலை நாகம்கணவிளக் காகிய கண்காணி யாகுமே.

3

அறிவாய் அறியாமை நீங்கி யவனேபொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன்அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

4

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்குஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்திஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே.

5

சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார்அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்தவமான செய்து தலைப்பறி கின்றார்நவமான தத்துவம் நாடகி லாரே.

6

நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார்நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே.