திருமுறை 10 · 10.07.28 · 4

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

வைகரி யாதியும் மாயா மலாதியும்பொய்கரி யான புருடாதி பேதமும்மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

அணுவில் அணுவினை ஆதிப் பிரானைஅணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவில் அணுவை அணுகவல் லார்கட்குஅணுவில் அணுவை அணுகலும் ஆமே.

3

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்யஇடர்கொண்ட பாச இருளற ஓட்டிநடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே.

4

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்கணுஅற நின்ற கலப்பது உணரார்இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்தணிவற நின்றான் சராசரம் தானே.