திருமுறை 10 · 10.07.01 · 7

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும்மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்காலங்கண் டான்அடி காணலும் ஆமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்மேதாதி நாதாந்த மீதாம் பராசக்திபோதா லயத்த விகாரந் தனிற்போதமேதாதி ஆதார மீதான உண்மையே.

3

மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால்தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரங்கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே.

4

மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டிஆதார சோதனை அத்துவ சோதனைதாதார மாகவே தானெழச் சாதித்தால்ஆதாரஞ் செய்போக மாவது காயமே.

5

ஆறந்த மும்கூடி யாகும் உடம்பினிற்கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின்ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலேஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே.

6

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல்போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

7

ஆயு மலரின் அணிமலர் மேலதுவாய இதழும் பதினாறும் அங்குளதூய அறிவு சிவானந்த மாகிப்போய்மேய அறிவாய் விளைந்தது தானே.