திருமுறை 10 · 10.06.04 · 10

திருச்சிற்றம்பலம்

ஆறாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானைமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கறப்பதி காட்டும் அமரர் பிரானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலேமறந்து பலஇருள் நீங்க மறைந்துசிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

3

அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்உறைவது காட்டகம் உண்பது பிச்சைதுறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

4

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்நெறியில் வழுவா தியங்கவல் லார்க்குநெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே.

5

கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும்நாடி வளைந்தது நான்கட வேனலேன்ஆடல் விடையுடை அண்ணல் திருவடிகூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே.

6

உழவன் உழஉழ வானம் வழங்கஉழவன் உழவினிற் பூத்த குவளைஉழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்டுழவன் அதனை யுழவொழிந் தானே.

7

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலிகார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

8

நாகமும் ஒன்று படம்ஐந்து நாலதுபோகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்ததுஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்தேகப் படம்செய் துடம்பிட மாமே.

9

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்சிவன்றாள் பலபல சீவனு மாகும்நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

10

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டதுவேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.