1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் குளிர்ச்சியான பிறை, சினம் மிகுந்த பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்து வந்த கங்கை ஆகியவற்றைச் சூடியுள்ளார். பெண்ணும் ஆணுமாக விளங்கும் பெருங்கருணையாளனான இப்பெருமான் பிரியாமல் எழுந்தருளி இருக்கும் கோயில் திருக் கண்ணார் கோயில் ஆகும். இக்கோயிலைக் கைகளால் தொழுது வணங்குபவர்களைத் துன்பங்களும் பாவங்களும் அணுகா. நல்வினையால் வரும் இன்பங்கள் அவர்களை அணுகும்.