திருமுறை 9 · 9.029 · 13

திருச்சிற்றம்பலம்

கோயில்

அருளியவர்
சேந்தனார்
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகலப்பொன்னின்செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள்புரிந்துபின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட் செய்மின் குழாம் புகுந்துஅண்டங் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும்சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
நிட்டையிலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும்சிட்டன் சிவனடியாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்துஅட்டமூர்த்திக்கு என் அகம்நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல்பட்டனுக்கு என்னைத் தன் பால்படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

சொல்லாண் டசுரு திப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமேவில்லாண் டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன்பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்சில்லாண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமேவில்லாண்ட கனகத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன்பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

புரந்தரன் மாலயன் பூசலிட்(டு) ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல்பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகலரிதாய்இரந்து இரந்து அழைப்ப என் உயிர்ஆண்ட கோவினுக்கு என்செய வல்லம் என்றும்கரந்தும் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக் கடல்பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்கும்திசை திசையனகூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாம்குழா மாய் நின்று கூத்தாடும்ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர்பாவிக்கும் பாவகத்(து) அப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
சேவிக்க வந்து அயன் இந்திரன் செங்கண்மால் எங்கும் திசை திசையனகூவிக்கவர்ந்து நெருங்கிக் குழாம்குழாமாய் நின்று கூத்தாடும்ஆவிக்கு அமுதை என் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர்பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்(கு)ஆட்பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்ஆரும் பெறாத அறிவுபெற்றேன் பெற்ற தார் பெறுவார் உலகில்ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள்பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

சேலுங் கயலும் திளைக்கும் கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்போலும் பொடியணி மார்பிலங் குமென்று புண்ணியர் போற்றிசைப்பமாலும் அயனும் அறியா நெறி தந்துவந்தென் மனத்தகத்தேபாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
சேலும் கயலும் திளைக்கும் கண்ணார் இளம் கொங்கையில் செங்குங்குமம்போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றிசைப்பமாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தேபாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் வண்டத்தொடும் உடனேபூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனகமும் அருளிச்சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
தாதையைத் தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனேபூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச்சோதி மணி முடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகிவிழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆரூரின்மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்தபழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகிவிழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின்மழவிடையாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்தபழ அடியாரொடும் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

12

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்துபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்துபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

13

எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்றுசிந்தை செய்யும் சிவன்சீர் அடியார் அடிநாய் செப்புறைஅந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே.
சொற்பிரிப்பு
எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமு தாம் எம்பிரான் என்றென்றுசிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் செப்புரைஅந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப் புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர்மேல்பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்