திருமுறை 9 · 9.022 · 11

திருச்சிற்றம்பலம்

கோயில்

அருளியவர்
திருவாலியமுதனார்
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்செய்ய பாதம் வந்தென் சிந்தையுள்ளிடம் கொண்டனவே.
சொற்பிரிப்பு
மையல் மாதொரு கூறன் மால்விடை ஏறி மான்மறி ஏந்திய தடம்கையன் கார் புரையும் கறைக் கண்டன் கனல்மழுவான்ஐயன் ஆரழல் ஆடுவான் அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்செய்ய பாதம் வந்தென் சிந்தையுள் இடம் கொண்டனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇஅலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன்புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்சிலம்பு கிண்கிணி என் சிந்தையுள்ளிடங் கொண்டனவே.
சொற்பிரிப்பு
சலம் பொற்றாமரை தாழ்ந்தெழுந்த தடமும் தடம் புனல்வாய் மலர் தழீஇஅலம்பி வண்டு அறையும் அணியார் தில்லை அம்பலவன்புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொற்கூத்தனார் கழல்சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம் கொண்டனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

குருண்ட வார்குழல் கோதை மார்குயில் போன்மிழற்றிய கோல மாளிகைதிரண்ட தில்லை தன்னுள் திருமல்கு சிற்றம் பலவன்மருண்டு மாமலை யான்மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரை தருதிரண்ட வான்குறங்கென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே.
சொற்பிரிப்பு
குருண்டவார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகைதிரண்ட தில்லை தன்னுள் திருமல்கு சிற்றம்பலவன்மருண்டு மாமலையான் மகள்தொழ ஆடுங்கூத்தன் மணி புரை தருதிரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம் கொண்டனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன்தாழ்ந்த தண்புனல்சூழ் தடமல்கு சிற்றம்பலவன்சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடுதாழ்ந்த கச்ச தன்றே தமியேனைத் தளர்வித்ததே.
சொற்பிரிப்பு
போழ்ந்தி யானை தன்னைப்பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன்தாழ்ந்த தண் புனல்சூழ் தட மல்கு சிற்றம்பலவன்சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து வீக்கும் பொன்னூல் தன்னினொடுதாழ்ந்த கச்சதன்றே தமியேனைத் தளர்வித்ததே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பந்த பாசமெலாம்அறப் பசுபாசம் நீக்கிய பன்முனிவரோ(டு)அந்தணர் வணங்கும் அணியார் தில்லை அம்பலவன்செந்தழல் புரைமேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள்உந்திவான்சுழி என்உள்ளத்துள்ளிடங் கொண்டனவே.
சொற்பிரிப்பு
பந்த பாசமெலாம் அறப் பசு பாச நீக்கிய பன்முனிவரோடுஅந்தணர் வணங்கும் அணியார் தில்லை அம்பலவன்செந்தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள்உந்தி வான்சுழி என் உள்ளத்துள் இடம் கொண்டனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

குதிரை மாவொடு தேர்பல குவிந்(து) ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடுமதுரவாய் மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன்அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்உதர பந்தனம் என்னுள்ளத் துள்ளிடங் கொண்டனவே.
சொற்பிரிப்பு
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பனாரொடுமதுரவாய் மொழியார் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலவன்அதிர வார் கழல் வீசி நின்றுஅழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ்உதர பந்தனம் என் உள்ளத்துள் இடம் கொண்டனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

படங்கொள் பாம்பணை யானொடு பிரமன் பரம்பரமா அருளென்றுதடங்கையால் தொழவும் தழலாடுசிற் றம்பலவன்தடங்கை நான்கும்அத் தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேற்றிசைவிடங்கொள் கண்ட மன்றே வினையேனை மெலிவித்தவே.
சொற்பிரிப்பு
படங்கொள் பாம்பு அணையானொடு பிரமன் பரம்பரமா அருளென்றுதடங்கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன்தடங்கை நான்கும் அத்தோள்களும் தடமார்பினில் பூண்கள் மேல் திசைவிடங்கொள் கண்டமன்றே வினையேனை மெலிவித்தவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழவையம் உய்யநின்று மகிழ்ந்தாடு சிற்றம் பலவன்செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு)ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண் டனவே.
சொற்பிரிப்பு
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறையோர்கள் தாம்தொழவையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடும் சிற்றம்பலவன்செய்ய வாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோடுஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

செற்றுவன் புரந்தீ எழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன்எற்றி மாமணிகள் எறிநீர்த் தில்லை அம்பலவன்மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுக மும்முகத்தினுள்நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சு ளேதிளைக் கின்றனவே.
சொற்பிரிப்பு
செற்று வன்புரம் தீயெழச் சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன்எற்றி மாமணிகள் எறி நீர்த்தில்லை அம்பலவன்மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுகமும் முகத்தினுள்நெற்றி நாட்ட மன்றே நெஞ்சுளே திளைக்கின்றனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தரமறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன்முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ் அகத்து மொட்டொடு மத்தமும்பிறைக்கொள் சென்னி யன்றே பிரியா(து) என்னுள் நின்றனவே.
சொற்பிரிப்பு
தொறுக் கள் வான் கமலம் மலர் உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தரமறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன்முறுக்குவார் சிகை தன்னொடு முகிழ்த்த அவ்வகத்து மொட்டோடு மத்தமும்பிறைக்கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

தூவி நீரொடு பூஅவை தொழு(து) ஏத்து கையின ராகி மிக்கதோர்ஆவி உள்நிறுத்தி அமர்ந்தூறிய அன்பினராய்த்தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தனைத் திருவாலி சொல்லிவைமேவ வல்லவர்கள் விடையான்அடி மேவுவரே.
சொற்பிரிப்பு
தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினராகி மிக்கதோர்ஆவியுள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய்த்தேவர் தாம் தொழ ஆடிய தில்லைக் கூத்தனைத் திருவாலி சொல் இவைமேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்