திருமுறை 9 · 9.019 · 10

திருச்சிற்றம்பலம்

கோயில்

அருளியவர்
பூந்துருத்திநம்பி காடநம்பி
பண்
சாளரபாணி
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்பஎத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லைஅத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
சொற்பிரிப்பு
முத்து வயிரமணி மாணிக்க மாலைகள் மேல்தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கு ஏய்ப்பஎத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்லைஅத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதேமுடியாமுத் தீவேள்வி மூவாயி ரவரொடும்குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே.
சொற்பிரிப்பு
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்அடியார் அமர்உலகம் ஆள நீ ஆளாதேமுடியா முத்தீவேள்வி மூவாயிரவரொடும்குடிவாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்தாடினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக்கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.
சொற்பிரிப்பு
அல்லி அம்பூம்பழனத்து ஆமூர் நாவுக்கரசைச்செல்ல நெறிவகுத்த சேவகனே தென்தில்லைக்கொல்லை விடையேறி கூத்தாடு அரங்காகச்செல்வ நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும்சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளிஅம்புந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச்செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.
சொற்பிரிப்பு
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமையாளும்சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட்கொண்டருளிஅம்புந்து கண்ணாளும் தானும் அணி தில்லைச்செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

களையா உடலோடு சேரமான் ஆருரன்விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ளமுளையா மதிசூடி மூவா யிரவரொடும்அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.
சொற்பிரிப்பு
களையா உடலோடு சேரமான் ஆரூரன்விளையா மதம் மாறா வெள்ளானை மேல்கொள்ளமுளையா மதிசூடி மூவாயிரவரொடும்அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதேபுவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச்சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே.
சொற்பிரிப்பு
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்புகலோகம் உண்டென்று புகுமிடம் நீ தேடாதேபுவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச்சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற்றம்பலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்பஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே.
சொற்பிரிப்பு
களகமணி மாடம் சூளிகை சூழ் மாளிகை மேல்அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்பஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்கு அகற்றும்தெளிகொண்ட தில்லைச் சிற்றம்பலமே சேர்ந்தனையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும்ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே.
சொற்பிரிப்பு
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும்ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம் நின் ஆடரங்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்தஇரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
சொற்பிரிப்பு
உருவத்து எரியுருவாய் ஊழிதோறு அத்தனையும்பரவிக்கிடந்து அயனும் மாலும் பணிந்தேத்தஇரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகை சூழ்ந்துஅரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக்காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்துபாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.
சொற்பிரிப்பு
சேடர் உறை தில்லைச் சிற்றம்பலத்தான் தன்ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக்காடன் தமிழ்மாலை பத்தும் கருத்தறிந்துபாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்