திருமுறை 9 · 9.001 · 11

திருச்சிற்றம்பலம்

கோயில்

அருளியவர்
திருமாளிகைத்தேவர்
பண்
பஞ்சமம்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே !அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காகவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
சொற்பிரிப்பு
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வேதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனேஅளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடு அரங்கு ஆகவெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள் இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்தசுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும் தூயநற் சோதியுள் சோதீ !அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா ! அயனொடு மாலறி யாமைப்படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே.
சொற்பிரிப்பு
இடர்கெடுத்து என்னைஆண்டுகொண்டுஎன்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்தசுடர்மணி விளக்கின் உள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீஅடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா அயனொடு மால் அறியாமைப்படர்ஒளி பரப்பிப் பரந்து நின்றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா ! சாமகண்டா ! அண்ட வாணா !நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான்அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத் தந்தபொன் அம்பலத்து ஆடி !கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத் தொண்டனேன் கருதுமா கருதே.
சொற்பிரிப்பு
தற்பரம்பொருளே சசிகண்ட சிகண்டா! சாமகண்டா! அண்ட வாணா!நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான்அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத் தந்த பொன்னம்பலத்து ஆடிகற்பமாய் உலகாய் அல்லை ஆனாயைத் தொண்டனேன் கருதுமா கருதே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என் பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !கருமையின் வெளியே கயற்கணாள் இமவான் மகள்உமை யவள்களை கண்ணே !அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும் அப்பனே அம்பலத்து அமுதேஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத் தொண்டனேன் உரைக்குமாறு உரையே.
சொற்பிரிப்பு
பெருமையில் சிறுமை பெண்ணொடுஆணாய்என் பிறப்புஇறப்பு அறுத்த பேரொளியேகருமையின் வெளியே கயல்கணாள் இமவான் மகள் உமையவள் களை கண்ணேஅருமையின் மறைநான்கு ஓலமிட்டுஅரற்றும் அப்பனே அம்பலத்து அமுதேஒருமையில் பல புக்கு உருவி நின்றாயைத் தொண்டனேன் உரைக்குமாறு உரையே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கோலமே மேலை வானவர் கோவே ! குணங்குறி இறந்ததோர் குணமே !காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா! காம நாசா !ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற் கோயில்கொண்டு ஆடவல் லானே !ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே.
சொற்பிரிப்பு
கோலமே மேலை வானவர் கோவே குணங்குறி இறந்ததோர் குணமேகாலமே கங்கை நாயகா எங்கள் கால காலா காம நாசாஆலமே அமுதுஉண்டு அம்பலம் செம்பொன் கோயில்கொண்டு ஆடவல்லானேஞாலமே தமியேன் நல் தவத்தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நீறணி பவளக் குன்றமே ! நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா !ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத் தரசே !ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத் தொண்டனேன் இசையுமாறு இசையே.
சொற்பிரிப்பு
நீறணி பவளக் குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பேவேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீராஆறணி சடை எம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத்து அரசேஏறணி கொடி எம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசையுமாறு இசையே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

தனதன்நல் தோழா சங்கரா ! சூல பாணியே! தாணுவே சிவனே !கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரசே கரனே !நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே.
சொற்பிரிப்பு
தனதன் நல் தோழா சங்கரா சூல பாணியே தாணுவே சிவனேகனக நல் தூணே கற்பகக் கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பேஅனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமர சேகரனேநுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் தனைத்திகை யாமேநிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே !அறம்பல திறங்கண்டு அருந்தவர்க்கு அரசாய் ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே.
சொற்பிரிப்பு
திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் தனைத் திகையாமேநிறம்பொன்னும் மின்னும் நிறைந்த சேவடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியேஅறம்பல திறம்கண்டு அருந்தவர்க்குஅரசாய் ஆலின்கீழ் இருந்த அம்பலவாபுறஞ்சமண் புத்தர் பொய்கள் கண்டாயைத் தொண்டனேன் புணருமா புணரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும் தாமரை நான்முகன் தலையும்ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம் நெறித்தரு ளியவுருத் திரனே !அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட ஆடப்பொன் னம்பலத்து ஆடும்சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே.
சொற்பிரிப்பு
தக்கன் நல்தலையும் எச்சன் வன்தலையும் தாமரை நான்முகன் தலையும்ஒக்க விண்டு உருள ஒண் திருப்புருவம் நெறித்து அருளிய உருத்திரனே!அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட ஆடப்பொன் அம்பலத்து ஆடும்சொக்கனே எவர்க்கும் தொடர்வுஅரியாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு அருள்புரி வள்ளலே ! மருளார்இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர் ஏறிய ஏறுசே வகனே !அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ் அடர்த்தபொன் னம்பலத் தரசே !விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே.
சொற்பிரிப்பு
மடங்கலாய்க் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள்புரி வள்ளலே மருளார்இடங்கொள் முப்புரம் வெந்துஅவிய வைதிகத்தேர் ஏறிய ஏறு சேவகனே!அடங்க வல் அரக்கன் அரள் திருவரைக் கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசேவிடம்கொள் கண்டத்துஎம் விடங்கனே உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன்திரு மாலொடு மயங்கிமுறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே.
சொற்பிரிப்பு
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கிமுறைமுறை முறையிட்டு ஓர்வு அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள்அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள்நிறைதரு கருணா நிலயமே உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்