திருமுறை 7 · 7.101 · 11

திருச்சிற்றம்பலம்

திருநாகைக்காரோணம்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
பிற்சேர்க்கை
தலம்
ஹ பிற்சேர்க்கை
நாடு
பிற்சேர்க்கை

1

பொன்னாம் இதழி விரைமத்தம் பொங்குகங்கைப் புரிசடைமேல்முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்னேதுன்னா மயூரம் சோலைதொறும் ஆட தூரத் துணைவண்டுதென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
பொன்‌ ஆம்‌ இதழிவிரைமத்தம் ‌ பொங்கு கங்கைப்‌ புரிசடைமேல்‌முன்னா அரவம்‌ மதியமும்‌ சென்னி வைத்தல்‌ மூர்க்கு அன்றே!துன்னா மயூரம்‌ சோலைதொறும்‌ ஆட, தூரத்‌ துணைவண்டுதென்னா என்னும்‌ தென்நாகைத் ‌ திருக்‌ காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

வரைக்கை வேழம் உரித்தும் அரன்நடமாட்டு ஆனால் மனைதோறும்இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர்முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்திரைக்கை காட்டும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
வரைக்கைவேழம்‌ உரித்தும்‌ அரன்‌ நடமாட்டு ஆனால்‌ மனைதோறும்‌இரக்கைஒழியீர்‌; பழி அறியில்‌, ஏற்றை விற்று நெல்‌ கொள்வீர்‌!முரைக்‌ கை பவளக்கால்‌ காட்ட, மூரிச் ‌ சங்கத்தொடு, முத்தம்‌திரைக்கை காட்டும்‌ தென்நாகைத்‌ திருக்காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

புல்லும் பெறுமே விடை புனரச் சடைமேல் ஒரு பெண் புக வைத்தீர்இல்லம் தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரேமுல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றைமுகம் மோதிரம் காட்டசெல்லும் புறவின் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
புல்லும்‌ பெறுமே, விடை? புணரச்‌ சடைமேல் ‌ ஒரு பெண்‌ புக வைத்தீர்‌!இல்லம்தோறும்‌ பலி என்றால்‌, இரக்க இடுவார்‌ இடுவாரே?முல்லை முறுவல்‌ கொடி எடுப்ப, கொன்றைமுகம் ‌ மோதிரம்‌ காட்ட,செல்லும்‌ புறவின்‌-தென்நாகைத்‌ திருக்காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளிபூண்தார் பொறி ஆடு அரவு ஆமை புரம்மூன்று எரித்தீர் பொருள்ஆகதூண்டா விளக்கு மணிமாட வீதிதோறும் சுடர்உய்க்கசேண்தார் புரிசைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
மாண்டார்‌ எலும்பும்‌ கலும்பும்‌ எலாம்‌ மாலை ஆகமகிழ்ந்துஅருளி,பூண்‌ தார்‌ பொறி ஆடுஅரவு ஆமை, புரம்மூன்றுஎரித்தீர்‌, பொருள்‌ஆக--தூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும்‌ சுடர்‌ உய்க்க,சேண்‌ தார்‌ புரிசைத்‌ தென்நாகைத் ‌ திருக்காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

ஒருவர்க்கு ஒருவர்அரிது ஆகில் உடை வெண்தலை கொண்டு ஊர்ஊரன்இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும்பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
ஒருவர்க்கு ஒருவர்‌ அரிதுஆகில்‌, உடை வெண் தலை கொண்டு ஊர்‌ ஊரன்‌இருவர்க்கு ஒருவர்‌ இரந்துஉண்டால்‌ எளிதே? சொல்லீர்‌--எத்தனையும்‌பரு வன்‌ கனகம்‌ கற்பூரம் ‌ பகர்ந்தமுகந்துபப்பரவர்‌தெருவில்‌ சிந்தும்‌ தென்நாகைத்‌ திருக்காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்துச் சோம்பாதேஆடை உடுத்துக் கண்டக்கால் அழகிது அன்றே அரிது அன்றுஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம்சேடை உடுத்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
தோ(ட்‌)டை உடுத்த காது உடையீர்‌! தோலைஉடுத்துச்‌ சோம்பாதேஆடை உடுத்துக்‌ கண்டக்கால்‌ அழகிது அன்றே! அரிது அன்று(வ்‌)--ஓடை உடுத்த குமுதமே உள்‌ அம்‌ கை மறிப்ப, புறம்கைஅனம்‌சேடைஉடுத்தும்‌ தென்நாகைத்‌ திருக்‌காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இக் காலம்விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர்கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணிமாளிகைக் குழாம்இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
கடு நஞ்சு உண்டு, இரக்கவே, கண்டம் ‌ கறுத்தது; இக்‌ காலம்‌--விடும்‌ நஞ்சு உண்டு--நாகத்தை வீட்டில் ‌ ஆட்டைவேண்டா, நீர்‌!--கொடு மஞ்சுகள்‌ தோய்‌ நெடுமாடம் ‌ குலவு மணி மாளிகைக்குழாம்‌இடு மிஞ்சு இதை சூழ்‌ தென்நாகைத்‌ திருக்காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

பள்ளம் பாறும் நறும் புனலைச் சூடி பெண் ஓர் பாகமாவெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமேதொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்தொள்ளும் வேலைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
பள்ளம்‌ பாறும்‌ நறும்புனலைச் ‌ சூடி, பெண்‌ ஓர்பாகமா,வெள்ளை நீறேபூசுவீர்‌; மேயும்‌ விடையும்‌ பாயுமே?-- .தொள்ளை ஆம்‌ நல்‌ கரத்து ஆனை சுமந்து வங்கம்‌ சுங்கம்‌இடத்‌தெள்ளும்‌ வேலைத்‌ தென்நாகைத்‌ திருக்‌காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

மத்தம் கவரும் மலர்க் கொன்றைமாலைமேல் மால் ஆனாளைஉய்த்து அங்கு அவரும் உரை செய்தால் உமக்கே அன்றே பழி உரையீர்முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர்சித்தம் கவரும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
மத்தம்‌ கவரும்‌ மலர்க் கொன்றைமாலைமேல்‌ மால்‌ ஆனாளைஉய்த்து அங்கு அவரும்‌ உரைசெய்தால்‌ உமக்கே அன்றே, பழி? உரையீர்‌--முத்தம்‌ கவரும்‌ நகை இளையார் ‌ மூரித்‌ தானைமுடிமன்னர்‌சித்தம்‌ கவரும்‌ தென்நாகைத் ‌ திருக்‌காரோணத்து இருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும்இறையில் எரித்தீர் ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான்திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்க மலர்ச்சிறை வண்டு அறையும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.
சொற்பிரிப்பு
மறை அன்று ஆலின்கீழ்‌ நால்வர்க்கு அளித்தீர்‌; களித்தார்‌ மதில்மூன்றும்‌இறையில்‌ எரித்தீர்‌; ஏழ்உலகும்‌ உடையார்‌ இரந்து ஊண்‌ இனிதேதான்‌?திறை கொண்டு அமரர்‌ சிறந்து இறைஞ்சித் ‌ திருக்‌ கோபுரத்துநெருக்க, மலர்ச்‌சிறைவண்டு அறையும்‌ தென்நாகைத்‌ திருக்‌ காரோணத்துஇருப்பீரே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

தேரார் வீதித் தென்நாகைத் திருக் காரோணத்து இறையானைச்சீரார் மாடத் திருநாவலூர்க் கோன் சிறந்த வன் தொண்டன்ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சோடு அஞ்சும் அறிவார்கள்வாரார் முலையாள் உமை கணவன் மதிக்க இருப்பார் வான் அகத்தே.
சொற்பிரிப்பு
தேர்‌ ஆர்‌ வீதித்‌ தென்நாகைத்‌ திருக்‌ காரோணத்துஇறையானைச்‌சீர்‌ ஆர்‌ மாடத்‌ திரு நாவலூர்க்‌ கோன்‌-- சிறந்த வன்தொண்டன்‌--ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடுஅஞ்சும்‌ அறிவார்கள்‌,வார்‌ ஆர்‌ முலையாள்‌ உமை கணவன் ‌ மதிக்க இருப்பார்‌, வான்‌அகத்தே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்