திருமுறை 7 · 7.098 · 11

திருச்சிற்றம்பலம்

திருநன்னிலத்துப் பெருங்கோயில்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
பஞ்சமம்
தலம்
நன்னிலத்துப் பெருங்கோயில்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலிபண்ணியல் மென்மொழி யார்இடக்* கொண்டுழல் பண்டரங்கன்புண்ணிய நான்மறை யோர்முறை யாலடி போற்றிசைப்பநண்ணிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.( * இடம் என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
தண்‌ இயல்‌ வெம்மையினான்‌; தலையில்‌ கடைதோறும்‌ பலி,பண்‌ இயல்‌ மென் மொழியார்‌, இடக் ‌ கொண்டு உழல்‌ பண்டரங்கன்‌புண்ணிய நால்மறையோர்‌ முறையால்‌ அடி போற்று இசைப்பநண்ணிய நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வலங்கிளர் மாதவஞ் செய்மலை மங்கையோர் பங்கினனாய்ச்சலங்கிளர் கங்கைதங் கச்சடை யொன்றிடை யேதரித்தான்பலங்கிளர் பைம்பொழில் தண்பனி வெண்மதி யைத்தடவநலங்கிளர் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
வலம்‌ கிளர்‌ மா தவம்‌ செய்‌ மலை மங்கை ஓர் பங்கினனாய் ,சலம்‌ கிளர்‌ கங்கை தங்கச்‌ சடை ஒன்று இடையே தரித்தான்‌பலம்‌ கிளர்‌ பைம்பொழில்‌ தண் பனி வெண்மதியைத்‌ தடவ,நலம்‌ கிளர்‌ நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கச்சிய னின்கருப் பூர்விருப் பன்கரு திக்கசிவார்உச்சியன் பிச்சையுண் ணியுல கங்களெல் லாமுடையான்நொச்சியம் பச்சிலை யான்நுரை தீர்புன லாற்றொழுவார்நச்சிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
கச்சியன்‌; இன்‌ கருப்பூர்‌ விருப்பன்‌; கருதிக்‌ கசிவார்‌உச்சியன்‌; பிச்சை உண்ணி; உலகங்கள் ‌எல்லாம்‌ உடையான்‌நொச்சி அம்‌ பச்சிலையால்‌, நுரை தீர்‌-புனலால்‌, தொழுவார்‌நச்சிய நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பாடிய நான்மறை யான்படு பல்பிணக் காடரங்காஆடிய மாநடத் தானடி போற்றியென் றன்பினராய்ச்சூடிய செங்கையி னார்பல தோத்திரம் வாய்த்தசொல்லிநாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
பாடிய நால் மறையான்‌; படு பல் பிணக்காடு அரங்காஆடிய மா நடத்தான்‌ "அடி போற்றி!” என்று அன்பினராய்ச்‌சூடிய செங்கையினார்‌ பல தோத்திரம்‌ வாய்த்த சொல்லிநாடிய நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பிலந்தரு வாயினொ டுபெரி தும்வலி மிக்குடையசலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன்நிலந்தரு மாமகள் கோன்நெடு மாற்கருள் செய்தபிரான்நலந்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
பிலம்‌ தரு வாயினொடு பெரிதும்‌ வலி மிக்கு உடையசலந்தரன்‌ ஆகம்‌ இரு பிளவு ஆக்கிய, சக்கரம்‌ முன்நிலம்‌ தரு மாமகள் கோன்‌ நெடுமாற்கு அருள்செய்த பிரான்‌நலம்‌ தரு நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

வெண்பொடி மேனியி னான்கரு நீல மணிமிடற்றான்பெண்படி செஞ்சடை யான்பிர மன்சிரம் பீடழித்தான்பண்புடை நான்மறை யோர்பயின் றேத்திப்பல் கால்வணங்கும்நண்புடை நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
வெண்பொடி மேனியினான்‌, கருநீல மணி மிடற்றான்‌,பெண்‌ படி செஞ்சடையான்‌, பிரமன் சிரம்‌ பீடு அழித்தான்‌பண்பு உடை நால்மறையோர்‌ பயின்று ஏத்தி, பல்கால்‌ வணங்கும்‌நண்பு உடை நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

தொடைமலி கொன்றைதுன் றுஞ்சடை யன்சுடர் வெண்மழுவாட்படைமலி கையன்மெய் யிற்பகட் டீருரிப் போர்வையினான்மடைமலி வண்கம லம்மலர் மேல்மட வன்னம்மன்னிநடைமலி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
தொடை மலி கொன்றை துன்றும்‌ சடையன்‌, சுடர்‌ வெண்மழுவாள்‌படை மலி கையன்‌, மெய்யில்‌ பகட்டு ஈர்‌ உரிப் போர்வையினான்‌மடை மலி வண் கமலம் மலர் மேல்‌ மட அன்னம்‌ மன்னிநடை மலி நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

குளிர்தரு திங்கள்கங் கைகுர வோடரக் கூவிளமும்மிளிர்தரு புன்சடை மேலுடை யான்விடை யான்விரைசேர்தளிர்தரு கோங்குவேங் கைதட மாதவி சண்பகமும்நளிர்தரு நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
குளிர் தரு திங்கள்‌, கங்கை, குரவோடு, அர, கூவிளமும்‌,மிளிர்தரு புன்சடை மேல்‌ உடையான்‌; விடையான்‌ விரை சேர்‌தளிர்‌ தரு கோங்கு, வேங்கை,தட மாதவி, சண்பகமும்‌,நளிர்தரு நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

கமர்பயில் வெஞ்சுரத் துக்கடுங் கேழற்பின் கானவனாய்அமர்பயில் வெய்திய ருச்சுன னுக்கருள் செய்தபிரான்தமர்பயில் தண்விழ வில்தகு சைவர் தவத்தின்மிக்கநமர்பயில் நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
கமர்‌ பயில்‌ வெஞ்சுரத்துக்‌ கடுங் ‌ கேழல்‌ பின்‌ கானவனாய்‌,அமர்‌ பயில்வு எய்தி, அருச்சுனனுக்கு அருள் செய்த பிரான்‌தமர்‌ பயில்‌ தண்‌ விழவில்‌ தகு சைவர்‌, தவத்தின்‌ மிக்கநமர்‌, பயில் நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கருவரை போலரக் கன்கயி லைம்மலைக் கீழ்க்கதறஒருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான்திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை வன்றிகழ் செம்பியர்கோன்நரபதி நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
சொற்பிரிப்பு
கருவரை போல்‌ அரக்கன்‌ கயிலை மலைக் கீழ்க்‌ கதற,ஒரு விரலால்‌ அடர்த்து, இன்‌ அருள் ‌ செய்த உமாபதி தான்‌திரை பொரு பொன்னி நன்‌ நீர்த்‌துறைவன்‌, திகழ்‌ செம்பியர் கோன்‌,நரபதி, நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

கோடுயர் வெங்களிற் றுத்திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்நாடிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனைச்சேடியல் சிங்கிதந் தைசடை யன்றிரு வாரூரன்பாடிய பத்தும்வல் லார்புகு வார்பர லோகத்துளே.
சொற்பிரிப்பு
கோடு உயர்‌ வெங்களிற்றுத்‌ திகழ் ‌ கோச்செங்கணான்‌ செய்‌ கோயில்‌,நாடிய நன்னிலத்துப்‌ பெருங்கோயில்‌ நயந்தவனைச்‌சேடு இயல்‌ சிங்கி தந்தை சடையன்‌, திரு ஆரூரன்பாடிய பத்தும்‌ வல்லார்‌ புகுவார்‌, பரலோகத்துளே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்