திருமுறை 7 · 7.084 · 10

திருச்சிற்றம்பலம்

திருக்கானப்பேர்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
புறநீர்மை
தலம்
கானப்பேர்
நாடு
பாண்டியநாடு

1

தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங் கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
தொண்டர்‌ அடித் தொழலும்‌, சோதி இளம் பிறையும்‌, சூது அன மென் முலையாள்‌ பாகமும்‌, ஆகி வரும்‌புண்டரிகப்‌ பரிசு ஆம்‌ மேனியும்‌; வானவர்கள்‌ பூசல்‌ இடக்‌ கடல்‌ நஞ்சு உண்ட கருத்து அமரும்‌,கொண்டல்‌ எனத்‌ திகழும்‌, கண்டமும்‌; எண் தோளும்‌; கோல நறுஞ்சடை மேல்‌ வண்ணமும்‌; கண் குளிரக்‌கண்டு, தொழப் பெறுவது என்றுகொலோ, அடியேன்‌? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங் கொக்கிற குங்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந் துள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன் அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்காத லுறத்தொழுவ தென்றுகொ லோவடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
கூதல்‌ இடும்‌ சடையும்‌, கோள்‌ அரவும்‌, விரவும்‌ கொக்கு இறகும்‌, குளிர்‌ மா மத்தமும்‌, ஒத்து உன தாள்‌ஓதல்‌ உணர்ந்து, அடியார்‌ உன்‌ பெருமைக்கு நினைந்து உள்‌ உருகா, விரசும்‌ ஓசையைப்‌ பாடலும்‌, நீஆதல்‌ உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன்‌ அங்கையில்‌ மா மலர்‌ கொண்டு, என் கணது அல்லல்‌ கெட,காதல்‌ உற, தொழுவது என்றுகொலோ, அடியேன்‌? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத் தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனைவானிடை மாமதியை மாசறு சோதியனை மாருத மும்மனலும் மண்டல மும்மாயகானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
நான்‌ உடை மாடு எனவே நன்மை தரும்‌ பரனை, நல்‌ பதம்‌ என்று உணர்வார்‌ சொல் பதம்‌ ஆர்‌ சிவனை,தேன்‌ இடை இன்னமுதை, மற்று அதனில்‌ தெளிவை, தேவர்கள்‌ நாயகனை, பூ உயர்‌ சென்னியனை,வான்‌ இடை மா மதியை, மாசு அறு சோதியனை, மாருதமும்‌ அனலும்‌ மண்‌ தலமும்‌ ஆயகான்‌ இடை மாநடன்‌ என்று எய்துவது என்றுகொலோ? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார் சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங்குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசுங் கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்கற்றன வும்பரவிக் கைதொழல் என்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
செற்றவர்‌ முப்புரம்‌ அன்று அட்ட சிலைத்‌ தொழில்‌ ஆர்‌ சேவகம்‌; முன்‌ நினைவார்‌ பாவகமும்‌; நெறியும்‌;குற்றம்‌ இல்‌ தன்‌ அடியார்‌ கூறும்‌ இசைப்‌ பரிசும்‌; கோசிகமும்‌, அரையில், கோவணமும்‌ அதளும்‌;மல்‌-திகழ்‌ திண் புயமும்‌; மார்பு இடை, நீறு துதை, மாமலை மங்கை உமை சேர்‌ சுவடும்‌; புகழக்‌கற்றனவும்‌ பரவிக்‌ கை தொழல்‌ என்றுகொலோ? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற் கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகேமுல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால் மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந்தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந் திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
கொல்லை விடைக்‌ குழகும்‌, கோல நறுஞ்சடையில் கொத்து அலரும்‌ இதழித் தொத்தும்‌, அதன்‌ அருகேமுல்லை படைத்த நகை மெல்லியலாள்‌ ஒருபால்‌ மோகம்‌ மிகுத்து இலங்கும்‌ கூறு செய்‌ எப்பரிசும்‌,தில்லை நகர்ப்‌ பொது உற்று ஆடிய சீர்‌ நடமும்‌, திண்‌ மழுவும்‌, கைமிசைக்‌ கூர்‌ எரியும்‌ அடியார்‌கல்லவடப்‌ பரிசும்‌, காணுவது என்றுகொலோ? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும் பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித்தெண்ணு தலைப்பெருமான் என்றெழு வாரவர்தம் ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவிநண்ணு தலைப்படுமா றெங்ஙனம் என்றயலே நைகிற என்னைமதித் துய்யும்வண் ணமருளுங்கண்ணு தலைக்கனியைக் காண்பதும் என்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
பண்ணு தலைப்‌ பயன்‌ ஆர்‌ பாடலும்‌, நீடுதலும்‌, பங்கய மாது அனையார்‌, பத்தியும்‌; “முத்தி அளித்துஎண்ணு தலைப் பெருமான்‌” என்று எழுவார்‌ அவர் தம்‌ ஏசறவும்‌; "இறை ஆம்‌ எந்தையையும்‌ விரவிநண்ணு தலைப்‌படும்‌ ஆறு எங்ஙனம்‌?'” என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும்‌ வணம்‌ அருளும்‌கண்ணுதலை, கனியை, காண்பதும்‌; என்றுகொலோ? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனைமூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப் பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக்காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
மாவை உரித்து அதள்‌ கொண்டு அங்கம்‌ அணிந்தவனை, வஞ்சர்‌ மனத்து இறையும்‌ நெஞ்சு அணுகாதவனை,மூவர்‌ உருத்‌ தனது ஆம்‌ மூல முதல் கருவை, மூசிடும்‌ மால்விடையின்‌ பாகனை, ஆகம்‌ உறப்‌பாவகம்‌ இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை, பால்‌ நறுநெய்‌ தயிர்‌ ஐந்து ஆடு பரம்பரனை,காவல்‌ எனக்கு இறை என்று, எய்துவது என்றுகொலோ? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத் தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்சுண்டத னுக்கிறவா தென்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணராஅண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங்கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
தொண்டர் தமக்கு எளிய சோதியை, வேதியனை, தூய மறைப்பொருளாம்‌ நீதியை, வார்கடல்‌ நஞ்சுஉண்டு அதனுக்கு இறவாது என்றும்‌ இருந்தவனை, ஊழி படைத்தவனோடு ஒள்‌ அரியும்‌ உணராஅண்டனை, அண்டர் தமக்கு ஆகம நூல்‌ மொழியும்‌ ஆதியை, மேதகு சீர்‌ ஓதியை, வானவர் தம்‌கண்டனை, அன்பொடு சென்று எய்துவது என்றுகொலோ? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

நாதனை நாதமிகுத் தோசைய தானவனை ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரைமாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத் தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக்காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
நாதனை, நாதம்‌ மிகுத்த ஒசை அது ஆனவனை, ஞான விளக்கு ஒளியாம்‌ ஊன்‌ உயிரை, பயிரை,மாதனை, மேதகு தன்‌ பத்தர்‌ மனத்து இறையும்‌ பற்று விடாதவனை, குற்றம்‌ இல்‌ கொள்கையனை,தூதனை, என் தனை ஆள்‌ தோழனை, நாயகனை, தாழ்‌ மகரக் குழையும்‌ தோடும்‌ அணிந்த திருக்‌காதனை, நாய்‌ அடியேன்‌ எய்துவது என்றுகொலோ? கார்‌ வயல்‌ சூழ்‌ கானப்பேர்‌ உறை காளையையே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும் ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழமன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.
சொற்பிரிப்பு
கன்னலை, இன்னமுதை, கார்வயல்‌ சூழ்‌ கானப்‌ பேர்‌ உறை காளையை, ஒண்‌ சீர்‌ உறை தண் தமிழால்‌உன்னி மனத்து அயரா, உள்‌ உருகி, பரவும்‌ ஒண்‌ பொழில்‌ நாவலர் கோன்‌ ஆகிய ஆரூரன்‌பன்னும்‌ இசைக் கிளவி பத்து இவை பாட வல்லார்‌, பத்தர்‌ குணத்தினராய்‌, எத்திசையும்‌ புகழ,மன்னி இருப்பவர்கள்‌, வானின்‌; இழிந்திடினும்‌, மண்டல நாயகராய்‌ வாழ்வது நிச்சயமே!
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்