திருமுறை 7 · 7.072 · 11

திருச்சிற்றம்பலம்

திருவலம்புரம்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
காந்தாரம்
தலம்
வலம்புரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
எனக்கு இனித்‌ தினைத்தனைப்‌ புகல்‌ இடம்‌ அறிந்தேன்‌;பனைக்‌ கனி பழம்‌ படும் ‌ பரவையின்‌ கரைமேல்‌எனக்கு இனியவன்‌, தமர்க்கு இனியவன்‌, எழுமையும்‌மனக்கு இனியவன் தனது இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

புரமவை எரிதர வளைந்தவில் லினன்அவன்மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்அரவுரி இரந்தவன் இரந்துண விரும்பிநின்றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
புரம்‌ அவை எரி தர வளைந்த வில்லினன்‌, அவன்‌;மர உரி புலி அதள்‌ அரை மிசை மருவினன்‌;அர உரி இரந்தவன்‌, இரந்து உண விரும்பி நின்று;இரவு எரிஆடி தன் ‌ இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்ளேறணி அடிகள்தம் இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
நீறு அணி மேனியன்‌, நெருப்பு உமிழ்‌ அரவினன்‌,கூறு அணி கொடுமழு ஏந்தி(ய) ஒர்‌ கையினன்‌,ஆறு அணி அவிர்சடை அழல்‌ வளர்‌ மழலை வெள்‌ஏறு அணி அடிகள் தம் ‌ இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்தெங்கொடு பனைபழம் படுமிடந் தேவர்கள்தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதரஎங்கள தடிகள்நல் இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
கொங்கு அணை சுரும்பு உண, நெருங்கிய குளிர்‌ இளதெங்கொடு பனை பழம் ‌ படும்‌ இடம்‌; தேவர்கள்‌தங்கிடும்‌ இடம்‌; தடங் கடல்‌ திரை புடை தரஎங்களது அடிகள்‌ நல் ‌ இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்நெடுமதில் சிறுமையின் நிரவவல் லவனிடம்படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
கொடு மழு விரகினன்‌, கொலை மலி சிலையினன்‌,நெடுமதில்‌ சிறுமையின்‌ நிரவ வல்லவன்‌, இடம்‌;படு மணி முத்தமும் ‌ பவளமும்‌ மிகச்‌ சுமந்துஇடு மணல்‌ அடைகரை இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவியமருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்திருங்கடல் அணைகரை இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
கருங்கடக் களிற்று உரிக் ‌ கடவுளது இடம்‌; கயல்நெருங்கிய நெடும்பெ(ண்‌)ணை அடும்பொடு விரவியமருங்கொடு, வலம்புரி சலஞ்சலம்‌ மணம்‌ புணர்ந்துஇருங்கடல்‌ அணைகரை இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

நரிபுரி காடரங் காநடம் ஆடுவர்வரிபுரி பாடநின் றாடும்எம் மான்இடம்புரிசுரி வரிகுழல் அரிவையோர் பால்மகிழ்ந்தெரியெரி யாடிதன் இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
நரி புரி காடு அரங்கா நடம்‌ ஆடுவர்‌,வரி புரி பாட நின்று ஆடும்‌ எம்மான்‌, இடம்‌;புரி சுரி வரி குழல் ‌ அரிவை ஓர் பால்‌ மகிழ்ந்துஎரி எரி ஆடி தன்‌ இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

பாறணி முடைதலை கலனென மருவியநீறணி நிமிர்சடை முடியினன் நிலவியமாறணி வருதிரை வயலணி பொழிலதுஏறுடை அடிகள்தம் இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
பாறு அணி முடை தலை கலன்‌ என மருவிய,நீறு அணி, நிமிர்சடை முடியினன்‌; நிலவியமாறு அணி வரு திரை வயல்‌ அணி பொழிலது,ஏறு உடை அடிகள் தம் ‌ இடம் வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

சடசட விடுபெணை பழம்படும் இடவகைபடவட கத்தொடு பலிகலந் துலவியகடைகடை பலிதிரி கபாலிதன் இடமதுஇடிகரை மணலடை இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
சடசட விடு பெ(ண்‌)ணை பழம்‌ படும்‌ இட வகை;பட வடகத்தொடு பல கலந்து உலவியகடைகடை பலி திரி கபாலி தன்‌ இடம்‌ அது;இடி கரை மணல்‌ அடை இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
குண்டிகைப்‌ படப்பினில் ‌ விடக்கினை ஒழித்தவர்‌கண்டவர்‌, கண்டு அடி வீழ்ந்தவர்‌, கனைகழல்‌தண்டு உடைத்‌ தண்டி தன் ‌ இனம்‌ உடை “அர” உடன்‌எண்திசைக்கு ஒரு சுடர் ‌ இடம்‌ வலம்புரமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினைஅருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே.
சொற்பிரிப்பு
வரும்‌ கலமும்‌ பல பேணுதல்‌, கருங்கடல்‌,இருங்‌குலப்‌ பிறப்பர் தம் ‌ இடம்‌ வலம்புரத்தினை,அருங்‌குலத்து அருந்தமிழ் ‌ ஊரன்‌ வன்தொண்டன்‌ சொல்‌பெருங்‌ குலத்தவரொடு பிதற்றுதல்‌ பெருமையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்