திருமுறை 7 · 7.051 · 12

திருச்சிற்றம்பலம்

திருவாரூர்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன்பொத்தினநோ யதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன்எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
பத்திமையும்‌ அடிமையையும் ‌ கைவிடுவான்‌, பாவியேன்‌பொத்தின நோய்‌ அது இதனைப்‌ பொருள்‌ அறிந்தேன்‌; போய்த்‌ தொழுவேன்‌;முத்தினை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன்‌எத்தனை நாள்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

2

ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச்செவ்வணமாந் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்திமையணவு கண்டத்து வளர்சடையெம் ஆரமுதைஎவ்வணம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
ஐ வணமாம்‌ பகழி உடை அடல்‌ மதனன்‌ பொடி ஆகச்செவ்வணம்‌ ஆம்‌ திருநயனம் ‌ விழி செய்த சிவமூர்த்தி,மை அணவு கண்டத்து வளர்சடை எம்‌ ஆரமுதை,எவ்‌வணம்‌ நான்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

3

சங்கலக்குந் தடங்கடல்வாய் விடஞ்சுடவந் தமரர்தொழஅங்கலக்கண் தீர்த்துவிடம் உண்டுகந்த அம்மானைஇங்கலக்கும் உடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றிஎங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
சங்கு அலக்கும்‌ தடங்கடல்வாய் ‌ விடம்‌ சுட வந்து அமரர்‌ தொழ,அங்கு அலக்கண்‌ தீர்த்து விடம் ‌ உண்டு உகந்த அம்மானை,இங்கு அலக்கும்‌ உடல்‌ பிறந்த அறிவிலியேன்‌ செறிவு இன்றிஎங்கு உலக்கப்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

4

இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அயராமேஅங்ஙனம்வந் தெனையாண்ட அருமருந்தென் ஆரமுதைவெங்கனல்மா மேனியனை மான்மருவுங் கையானைஎங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
இங்ஙனம்‌ வந்து இடர்ப்‌ பிறவிப் ‌ பிறந்து அயர்வேன்‌; அயராமேஅங்ஙனம்‌ வந்து எனை ஆண்ட அருமருந்து, என்‌ ஆரமுதை,வெங்கனல்‌ மா மேனியனை, மான்‌ மருவும்‌ கையானை,எங்கனம்‌ நான்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

5

செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெரிவரியஅப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றிஎப்பரிசு பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
செப்ப அரிய அயனொடு மால்‌ சிந்தித்தும்‌ தெளிவு அரியஅப்‌ பெரிய திருவினையே, அறியாதே அருவினையேன்‌ஒப்பு அரிய குணத்தானை, இணைஇலியை, அணைவு இன்றிஎப்‌பரிசு பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

6

வன்னாகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழிதன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனைமுன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமந்தென்னாகப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
வல்‌-நாகம்‌ நாண்‌, வரை வில்‌, அங்கி கணை, அரி பகழி,தன்‌ ஆகம்‌ உறவாங்கிப் ‌ புரம்‌ எரித்த தன்மையனை,முன்‌னாக நினையாத மூர்க்கனேன்‌ ஆக்கை சுமந்துஎன்‌ ஆகப்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

7

வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழியமுன்சயமார் பாதத்தால் முனிந்துகந்த மூர்த்திதனைமின்செயும்வார் சடையானை விடையானை அடைவின்றிஎன்செயநான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
வன்‌ சயமாய்‌ அடியான் மேல்‌ வரும்‌ கூற்றின்‌ உரம்‌ கிழியமுன்‌ சயம்‌ ஆர்‌ பாதத்தால்‌ முனிந்து உகந்த மூர்த்தி தனை,மின்‌ செயும்‌ வார்சடையானை, விடையானை, அடைவு இன்றிஎன்‌ செய நான்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

8

முன்னெறிவா னவர்கூடித் தொழுதேத்தும் முழுமுதலைஅந்நெறியை அமரர்தொழும் நாயகனை அடியார்கள்செந்நெறியைத் தேவர்குலக் கொழுந்தைமறந் திங்ஙனம்நான்என்னறிவான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
முன்‌ நெறி வானவர்‌ கூடித் ‌ தொழுது ஏத்தும்‌ முழுமுதலை,அந்‌நெறியை, அமரர்‌ தொழும் ‌ நாயகனை, அடியார்கள்‌செந்நெறியை, தேவர் குலக் கொழுந்தை, மறந்து இங்ஙனம்‌ நான்‌என்‌ அறிவான்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

9

கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தாரஉற்றுளனாம் ஒருவனைமுன் இருவர்நினைந் தினிதேத்தப்பெற்றுளனாம் பெருமையனைப் பெரிதடியேன் கையகன்றிட்டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
கற்று உள வான்கனி ஆய கண்ணுதலை, கருத்து ஆரஉற்று உளனாம்‌ ஒருவனை, முன்‌ இருவர்‌ நினைந்து இனிது ஏத்தப்‌பெற்றுளனாம்‌ பெருமையனைப் பெரிது அடியேன்‌ கை அகன்‌றிட்டுஎற்று உளனாய்ப்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

10

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகிமாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லாஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
ஏழ்‌ இசையாய்‌, இசைப் பயனாய்‌, இன்‌ அமுதாய்‌, என்னுடையதோழனுமாய்‌, யான்‌ செய்யும் ‌ துரிசுகளுக்கு உடனாகி,மாழை ஒண்கண்‌ பரவையைத்‌ தந்து ஆண்டானை, மதி இல்லாஏழையேன்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

11

வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாமுய்யநுங்கிஅமு தவர்க்கருளி நொய்யேனைப் பொருட்படுத்துச்சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன்எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
வங்கம்‌ மலி கடல்‌ நஞ்சை, வானவர்கள் தாம்‌ உய்ய,நுங்கி, அமுது அவர்க்கு அருளி, நொய்யேனைப்‌ பொருள்படுத்துச்‌சங்கிலியோடு எனைப்‌ புணர்த்த தத்துவனை, சழக்கனேன்‌எங்கு உலக்கப்‌ பிரிந்திருக்கேன்‌, என்‌ ஆரூர்‌ இறைவனையே?
உரை

உரை எழுதப்படவில்லை

12

பேரூரும் மதகரியின் உரியானைப் பெரியவர்தஞ்சீரூருந் திருவாரூர்ச் சிவனடியே திறம்விரும்பிஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில்ஊரூரன் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே.
சொற்பிரிப்பு
பேர்‌ ஊரும்‌ மதகரியின்‌ உரியானை, பெரியவர் தம்‌சீர்‌ ஊரும்‌ திரு ஆரூர்ச் ‌ சிவன்‌, அடியே திறம்‌ விரும்பிஆரூரன்‌ அடித்தொண்டன்‌, அடியன்‌ சொல்‌ அகலிடத்தில்‌ஊர் ஊரன்‌ இவை வல்லார் ‌ உலகவர்க்கு மேலாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்