1
விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனேகடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்றஅடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.
சொற்பிரிப்பு
விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்!படை ஆர் வெண்மழுவா! பரம் ஆய பரம்பரனே!கடி ஆர் பூம்பொழில் சூழ் திருக் கற்குடி மன்னி நின்றஅடிகேள்! எம்பெருமான்! அடியேனையும், “அஞ்சல்!" என்னே!
உரை
உரை எழுதப்படவில்லை