திருமுறை 7 · 7.025 · 10

திருச்சிற்றம்பலம்

திருமுதுகுன்றம்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
நட்டராகம்
தலம்
முதுகுன்றம்
நாடு
நடுநாடு

1

பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பேஎன்செய்த வாறடிகேள் அடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
பொன்‌ செய்த மேனியினீர்‌; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்‌;முன்‌ செய்த மூஎயிலும்‌ எரித்தீர்‌; முதுகுன்று அமர்ந்தீர்‌;மின்‌ செய்த நுண்இடையாள் ‌ பரவை இவள் தன்‌ முகப்பே,என்‌ செய்த ஆறு, அடிகேள்‌! அடியேன்‌ இட்டளம்‌ கெடவே?
உரை

உரை எழுதப்படவில்லை

2

உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச்செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
உம்பரும்‌ வானவரும்‌ உடனே நிற்கவே, எனக்குச்‌செம்பொனைத்‌ தந்து அருளி, திகழும்‌ முதுகுன்று அமர்ந்தீர்‌;வம்பு அமரும்‌ குழலாள் ‌ பரவை இவள்‌ வாடுகின்றாள்‌;எம்பெருமான்‌! அருளீர்‌, அடியேன்‌ இட்டளம்‌ கெடவே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனேமுத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனேமைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமேஅத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
பத்தா! பத்தர்களுக்கு அருள் செய்யும்‌ பரம்பரனே !முத்தா! முக்கணனே! முதுகுன்றம்‌ அமர்ந்தவனே!மைத்து ஆரும்‌ தடங்கண்‌ பரவை இவள்‌ வாடாமே, .அத்தா! தந்தருளாய்‌, அடியேன்‌ இட்டளம்‌ கெடவே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர்திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர்கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பேஅங்கண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்‌ மறைநான்கும்‌ விரித்து உகந்தீர்‌;திங்கள்‌ சடைக்கு அணிந்தீர்‌; திகழும்‌ முதுகுன்று அமர்ந்தீர்‌;கொங்கை நல்லாள் பரவை குணம்‌ கொண்டு இருந்தாள்‌ முகப்பே,அங்கணனே! அருளாய்‌, அடியேன்‌ இட்டளம்‌ கெடவே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்தசெய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய்பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள்ஐயா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
மை ஆரும்‌ மிடற்றாய்‌! மருவார்‌ புரம் மூன்று எரித்தசெய்யார்‌ மேனியனே! திகழும்‌ முதுகுன்று அமர்ந்தாய்‌!பை ஆரும்‌ அரவு ஏர் ‌ அல்குலாள்‌ இவள்‌ வாடுகின்றாள்‌;ஐயா! தந்தருளாய்‌, அடியேன்‌ இட்டளம்‌ கெடவே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்முடியால் வந்திறைஞ்ச முதுகுன்ற மமர்ந்தவனேபடியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பேஅடிகேள் *தந்தருளீர் அடியேனிட் டளங்கெடவே.(* தந்தருளாய் என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
நெடியான்‌, நான்முகனும்‌ , இரவியொடும்‌, இந்திரனும்‌,முடியால்‌ வந்து இறைஞ்ச முதுகுன்றம்‌ அமர்ந்தவனே!படி ஆரும்‌ இயலாள்‌ பரவை இவள் தன்‌ முகப்பே,அடிகேள்‌! தந்தருளாய்‌, அடியேன்‌ இட்டளம்‌ கெடவே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய்பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பேஅந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
கொந்து அணவும்‌ பொழில்‌ சூழ் ‌ குளிர்‌ மா மதில்‌ மாளிகை மேல்‌வந்து அணவும்‌ மதி சேர்‌, சடை மா முதுகுன்று உடையாய்‌!பந்து அணவும்‌ விரலாள் ‌ பரவை இவள் தன்‌ முகப்பே,அந்தணனே! அருளாய்‌, அடியேன்‌ இட்டளம்‌ கெடவே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழமுரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனேவிரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பேஅரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
பரசு ஆரும்‌ கரவா! பதினெண் கணமும்‌ சூழமுரசார்‌ வந்து அதிர(ம்‌), முதுகுன்றம்‌ அமர்ந்தவனே!விரை சேரும்‌ குழலாள்‌ பரவை இவள் தன்‌ முகப்பே,அரசே! தந்தருளாய்‌, அடியேன்‌ இட்டளம்‌ கெடவே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனேமூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனேபூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பேகூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.
சொற்பிரிப்பு
ஏத்தாது இருந்து அறியேன்‌; இமையோர்‌ தனி நாயகனே!முத்தாய்‌, உலகுக்கு எல்லாம்‌; முதுகுன்றம்‌ அமர்ந்தவனே!பூத்து ஆரும்‌ குழலாள் ‌ பரவை இவள்‌ தன்‌ முகப்பே,கூத்தா! தந்து அருளாய்‌, கொடியேன்‌ இட்டளம்‌ கெடவே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்றுமுறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மைமறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்னஇறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே.
சொற்பிரிப்பு
பிறை ஆரும்‌ சடை எம்பெருமான்‌! “அருளாய்‌” என்று,முறையால்‌ வந்து அமரர்‌ வணங்கும்‌ முதுகுன்றர் தம்மைமறையார்‌ தம்‌ குரிசில் வயல்‌ நாவல்‌ ஆரூரன்‌ சொன்னஇறை ஆர்‌ பாடல்‌ வல்லார்க்கு எளிது ஆம்‌, சிவலோகம்‌ அதே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்