திருமுறை 7 · 7.010 · 10

திருச்சிற்றம்பலம்

திருக்கச்சிஅனேகதங்காவதம்

அருளியவர்
நம்பியாரூரர்
பண்
இந்தளம்
தலம்
கச்சி அனேகதங்காவதம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு மானதி டந்திக ழைங்கணையக்கோனை யெரித்தெரி யாடி யிடங்குல வான திடங்குறை யாமறையாமானை இடத்ததோர் கையனி டம்மத மாறு படப்பொழி யும்மலைபோல்யானை யுரித்த பிரான திடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
தேன் நெய்‌ புரிந்து உழல்‌ செஞ்சடை எம்பெருமானது இடம்‌; திகழ்‌ ஐங்கணை அக்‌கோனை எரித்து எரி ஆடி இடம்‌; குலவானது இடம்‌; குறையா மறை ஆம்‌மானை இடத்தது ஓர்‌ கையன்‌ இடம்‌; மதம்‌ . மாறுபடப்‌ பொழியும்‌ மலை போல்‌யானை உரித்த பிரானது இடம்‌- கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கூறு நடைக்குழி கட்பகு வாயன பேயுகந் தாடநின் றோரியிடவேறு படக்குட கத்திலை யம்பல வாணன்நின் றாடல் விரும்புமிடமேறு விடைக்கொடி யெம்பெரு மானிமை யோர்பெரு மானுமை யாள்கணவனாறு சடைக்குடை யப்ப னிடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
கூறு நடைக்‌ குழி கண்‌ பகு வாயன பேய்‌ உகந்து ஆட, நின்று ஓரி இட,வேறுபடக்‌ குடகத் தி(ல்‌)லை அம்பலவாணன்‌ நின்று ஆடல்‌ விரும்பும்‌ இடம்‌;ஏறுவிடைக்‌ கொடி எம்பெருமான்‌, இமையோர் பெருமான்‌, உமையாள் கணவன்‌,ஆறு சடைக்கு உடை அப்பன்‌ இடம்‌-கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கொடிக ளிடைக்குயில் கூவுமி டம்மயி லாலுமி டம்மழு வாளுடையகடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக் கண்டனி டம்பிறைத் துண்டமுடிச்செடிகொள் வினைப்பகை தீருமி டந்திரு வாகுமி டந்திரு மார்பகலத்தடிக ளிடம்அழல் வண்ண னிடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
கொடிகள்‌ இடைக்‌ குயில்‌ கூவும்‌ இடம்‌; மயில்‌ ஆலும்‌ இடம்‌; மழுவாள்‌ உடையகடி கொள்‌ புனல்‌ சடை கொண்ட நுதல்‌ கறைக்கண்டன்‌ இடம்‌; பிறைத்துண்டம்‌ முடிச்‌செடி கொள்‌ வினைப்பகை தீரும்‌ இடம்‌; திரு ஆரும்‌ இடம்‌; திருமார்பு அகலத்துஅடிகள்‌ இடம்‌; அழல்வண்ணன்‌ இடம்‌-கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங் கங்கையுந் திங்களுஞ் சூடுசடைமங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப் பங்கினிற் றங்க வுவந்தருள்செய்சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள் பாய வியாத்தழல் போலுடைத்தமங்கை மழுத்திகழ் கைய னிடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும்‌. கங்கையும்‌ திங்களும்‌ சூடு சடை,மங்குல்‌ நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில்‌ தங்க உவந்து அருள்செய்‌ ,சங்கு குழைச்‌ செவி கொண்டு, அருவித்திரள்‌ பாய, அவியாத்‌ தழல்‌ போல்‌ உடை, தம்‌அம்‌ கை, மழுத்‌ திகழ்‌ கையன்‌ இடம்‌-கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

பைத்த படத்தலை யாடர வம்பயில் கின்ற விடம்பயி லப்புகுவார்சித்த மொருநெறி வைத்த விடந்திகழ் கின்ற விடந்திரு வானடிக்கேவைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள வைத்த விடம்மழு வாளுடையவத்த னிடம்மழல் வண்ண னிடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
பைத்த படத்தலை ஆடு அரவம்‌ பயில்கின்ற இடம்‌; பயிலப்‌ புகுவார்‌சித்தம்‌ ஒரு நெறி வைத்த இடம்‌; திகழ்கின்ற இடம்‌; திருவான்‌ அடிக்கேவைத்த மனத்தவர்‌, பத்தர்‌, மனம்கொள வைத்த இடம்‌; மழுவாள்‌ உடையஅத்தன்‌ இடம்‌; அழல் வண்ணன்‌ இடம்‌-கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

தண்ட முடைத்தரு மன்றம ரென்றம ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம்பிண்ட முடைப்பிற வித்தலை நின்று நினைப்பவ ராக்கையை நீக்குமிடம்கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த பிரான திடங்கட லேழுகடந்தண்ட முடைப்பெரு மான திடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
தண்டம்‌ உடைத்‌ தருமன் தமர்‌ என் தமரைச்‌ செயும்‌ வன்‌ துயர்‌ தீர்க்கும்‌ இடம்‌;பிண்டம்‌ உடைப்‌ பிறவித் தலை நின்று நினைப்பவர்‌ ஆக்கையை நீக்கும்‌ இடம்‌;கண்டம்‌ உடைக்‌ கருநஞ்சு கரந்த பிரானது இடம்‌; கடல்‌ ஏழு கடந்துஅண்டம்‌ உடைப்‌ பெருமானது இடம்‌-கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு தேத்து மிடங்கதி ரோனொளியால்விட்ட விடம்விடை யூர்தி யிடங்குயிற் பேடைதன் சேவலோ டாடுமிடம்மட்டு மயங்கி அவிழ்ந்த மலரொரு மாதவி யோடு மணம்புணருமட்ட புயங்கப் பிரான திடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
கட்டு மயக்கம்‌ அறுத்தவர்‌ கைதொழுது ஏத்தும்‌ இடம்‌; கதிரோன்‌ ஒளியால்‌விட்ட இடம்‌; விடைஊர்தி இடம்‌; குயில்பேடை தன்‌ சேவலொடு ஆடும்‌ இடம்‌;மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்‌ ஒரு மாதவியோடு மணம்‌ புணரும்‌அட்ட புயங்கப் பிரானது இடம்‌- கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர் தம்புர மூன்றும் பொடிப்படுத்தவில்லி யிடம்விர வாதுயி ருண்ணும்வெங் காலனைக் கால்கொடு வீந்தவியக்கொல்லி யிடங்குளிர் மாதவி மவ்வல் குராவகு ளங்குருக் கத்திபுன்னையல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
புல்லி இடம்‌; “தொழுது உய்தும்‌' என்னாதவர் தம்‌ புரம் மூன்றும்‌ பொடிப் படுத்தவில்லி இடம்‌; விரவாது உயிர்‌ உண்ணும்‌ வெங்காலனைக்‌ கால்கொடு வீந்து அவியக்‌கொல்லி இடம்‌- குளிர்‌ மாதவி, மவ்வல்‌, குரா, வகுளம்‌, குருக்கத்தி, புன்னை,அல்லி இடைப்‌ பெடை வண்டு உறங்கும்‌ கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

சங்கை யவர்புணர் தற்கரி யான்றள வேனகை யாள்தவி ராமிகுசீர்மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை நட்டம்நின் றாடிய சங்கரனெம்மங்கையி னல்லன லேந்து மவன்கனல் சேரொளி யன்னதோர் பேரகலத்தங்கை யவன்னுறை கின்ற விடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
சங்கையவர் புணர்தற்கு அரியான்‌, தளவு ஏல்‌ நகையாள்‌ தவிரா மிகு சீர்‌மங்கை அவள்‌ மகிழச்‌ சுடுகாட்டு இடை நட்டம்‌ நின்று ஆடிய சங்கரன்‌, எம்‌அங்கையில்‌ நல்‌ அனல்‌ ஏந்துமவன்‌, கனல்‌ சேர்‌ ஒளி அன்னது ஓர்‌ பேரகலத்துஅங்கையவன்‌ உறைகின்ற இடம்‌- கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

வீடு பெறப்பல வூழிகள் நின்று நினைக்கு மிடம்வினை தீருமிடம்பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு மேவினர் தங்களைக் காக்குமிடம்பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன் உரைத்தவிம் மாலைகள் பத்தும்வல்லார்கூடு மிடஞ்சிவ லோக னிடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
சொற்பிரிப்பு
வீடு பெறப்‌ பல ஊழிகள்‌ நின்று நினைக்கும்‌ இடம்‌; வினை தீரும்‌ இடம்‌;பீடு பெறப்‌ பெரியோரது இடம்‌ கொண்டு மேவினர் தங்களைக்‌ காக்கும்‌ இடம்‌;பாடும்‌ இடத்துஅடியான்‌, புகழ்‌ ஊரன்‌, உரைத்த இம்‌ மாலைகள் பத்தும்‌ வல்லார்‌கூடும்‌ இடம்‌; சிவலோகன்‌ இடம்‌- கலிக்‌ கச்சி அனேகதங்காவதமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்