திருமுறை 6 · 6.090 · 10

திருச்சிற்றம்பலம்

திருக்கஞ்சனூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கஞ்சனூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னைநாவலனை நரைவிடையொன் றேறு வானை நால்வேத மாறங்க மாயி னானைஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
மூஇலைநல் சூலம்வலன் ஏந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை,நாவலனை, நரைவிடைஒன்று ஏறு வானை, நால்வேதம் ஆறுஅங்கம் ஆயி னானை,ஆவினில்ஐந்து உகந்தானை, அமரர் கோவை, அயன்திருமால் ஆனானை, அனலோன் போற்றும்காவலனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

தலையேந்து கையானை என்பார்த் தானைச் சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோணாக மசைத்தானைக் குலமாங் கைலைமலையானை மற்றொப்பா ரில்லா தானை மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
தலைஏந்து கையானை, என்புஆர்த் தானைச், சவம்தாங்கு தோளானைச், சாம்ப லானைக்,குலைஏறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோள்நாகம் அசைத்தானைக், குலம்ஆம் கைலை-மலையானை, மற்றுஒப்பார் இல்லா தானை, மதிகதிரும் வானவரும் மாலும் போற்றும்கலையானைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக், கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச் சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச் செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம் பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்டகண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
தொண்டர்குழாம் தொழுதுஏத்த அருள்செய் வானைச்; சுடர்மழுவாள் படையானைச்; சுழிவான் கங்கைத்தெண்திரைகள் பொருதுஇழிசெஞ் சடையி னானைச்; செக்கர்வான் ஒளியானைச்; சேராது எண்ணிப்பண்டுஅமரர் கொண்டுஉகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்துத், தலைஅறுத்துப், பல்கண் கொண்டகண்டகனைக்; கஞ்சனூர் ஆண்ட கோவைக், கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப் பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனைஎண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும் இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங்கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
விண்ணவனை, மேருவில்லா உடையான் தன்னை, மெய்ஆகிப் பொய்ஆகி விதிஆ னானைப்,பெண்ணவனை, ஆண்அவனைப், பித்தன் தன்னைப், பிணம்இடுகாடு உடையானைப், பெருந்தக் கோனை,எண்ணவனை, எண்திசையும் கீழும் மேலும் இருவிசும்பும் இருநிலமும் ஆகித் தோன்றும்கண்ணவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக், கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

உருத்திரனை உமாபதியை உலகா னானை உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப் பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்றநெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
உருத்திரனை, உமாபதியை, உலகுஆ னானை, உத்தமனை, நித்திலத்தை, ஒருவன் தன்னைப்,பருப்பதத்தைப், பஞ்சவடி மார்பி னானைப் பகல்இரவுஆய் நீர்வெளிஆய்ப் பரந்து நின்றநெருப்புஅதனை, நித்திலத்தின் தொத்துஒப் பானை, நீறுஅணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்கருத்தவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச் செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
ஏடுஏறு மலர்க்கொன்றை, அரவு, தும்பை, இளமதியம், எருக்கு,வான் இழிந்த கங்கைச்,சேடுஎறிந்த சடையானைத்; தேவர் கோவைச்; செம்பொன்மால் வரையானைச்; சேர்ந்தார் சிந்தைக்கேடுஇலியைக்; கீழ்வேளூர் ஆளும் கோவைக்; கிறிபேசி, மடவார்பெய் வளைகள் கொள்ளும்காடவனைக்; கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

நாரணனும் நான்முகனு மறியா தானை நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும் பால்வணனைத் தீவணனைப் பகலா னானைவார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
நாரணனும் நான்முகனும் அறியா தானை, நால்வேதத்து உருவானை, நம்பி தன்னைப்,பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண்டு உண்ணும் பால்வணனைத், தீவணனைப், பகல்ஆ னானை,வார்பொதியும் முலையாள்ஓர் கூறன் தன்னை, மான்இடங்கை உடையானை, மலிவுஆர் கண்டம்கார்பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

வானவனை வலிவலமும் மறைக்காட் டானை மதிசூடும் பெருமானை மறையோன் றன்னைஏனவனை இமவான்றன் பேதை யோடும் இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத் தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
வானவனை, வலிவலமும் மறைக்காட் டானை, மதிசூடும் பெருமானை, மறையோன் தன்னை,ஏனவனை, இமவான்தன் பேதை யோடும் இனிதுஇருந்த பெருமானை ஏத்து வார்க்குத்தேனவனைத், தித்திக்கும் பெருமான் தன்னைத், தீதுஇலா மறையவனைத், தேவர் போற்றும்கானவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக், கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

நெருப்புருவத் திருமேனி வெண்ணீற் றானை நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச் சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தைவிருப்பவனை விதியானை வெண்ணீற் றானை விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
நெருப்புஉருவத் திருமேனி வெண்நீற் றானை, நினைப்பார்தம் நெஞ்சானை, நிறைவுஆ னானைத்,தருக்குஅழிய முயலகன்மேல் - தாள்வைத் தானைச், சலந்தரனைத் தடிந்தோனைத், தக்கோர் சிந்தைவிருப்பவனை, விதியானை, வெண்நீற் றானை, விளங்குஒளிஆய், மெய்ஆகி, மிக்கோர் போற்றும்கருத்தவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

மடலாழித் தாமரையா யிரத்தி லொன்று மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத் தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்டஅடலாழித் தேருடைய இலங்கைக் கோனை அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
சொற்பிரிப்பு
மடல்ஆழித் தாமரைஆ யிரத்தில் ஒன்று மலர்க்கண்இடந்து இடுதலுமே, மலிவான் கோலச்சுடர்ஆழி நெடுமாலுக்கு அருள்செய் தானைத்; தும்பிஉரி போர்த்தானைத்; தோழன் விட்டஅடல்ஆழித் தேர்உடைய இலங்கைக் கோனை அருவரைக்கீழ் அடர்த்தானை; அருள்ஆர் கருணைக்-கடலானைக்; கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக்,- கண்ஆரக் கண்டுஉய்ந் தேனே!
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்