திருமுறை 6 · 6.087 · 10

திருச்சிற்றம்பலம்

திருச்சிவபுரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
சிவபுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண் வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்ஆனவன்காண் ஆனைந்து மாடி னான்காண் ஐயன்காண் கையிலன லேந்தி யாடுங்கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண் கருதுவார் இதயத்துக் கமலத் தூறுந்தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
வானவன்காண்; வானவர்க்கும் மேல்ஆ னான்காண்; வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்ஆனவன்காண்; ஆன்ஐந்தும் ஆடி னான்காண்; ஐயன்காண்; கையில்அனல் ஏந்தி ஆடும்கானவன்காண்; கானவனுக்கு அருள்செய் தான்காண்; கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்தேன்அவன்காண்; சென்றுஅடையாச் செல்வன் தான்காண்; சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

நக்கன்காண் நக்கரவ மரையி லார்த்த நாதன்காண் பூதகண மாட ஆடுஞ்சொக்கன்காண் கொக்கிறகு சூடி னான்காண் துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற் றான்காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்றதிக்கன்காண் செக்கரது திகழு மேனிச் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
நக்கன்காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த நாதன்காண்; பூதகணம் ஆட ஆடும்சொக்கன்காண்; கொக்குஇறகு சூடி னான்காண்; துடிஇடையாள் துணைமுலைக்குச் சேர்வுஅது ஆகும்பொக்கன்காண்; பொக்கணத்த வெண்நீற் றான்காண்; புவனங்கள் மூன்றினுக்கும் பொருள்ஆய் நின்றதிக்கன்காண்; செக்கர்அது திகழும் மேனிச் சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே..
உரை

உரை எழுதப்படவில்லை

3

வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண் மலரவன்மால் காண்பரிய மைந்தன் றான்காண்கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்அம்பர்நகர்ப் பெருங்கோயி லமர்கின் றான்காண் அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்செம்பொனெனத் திகழ்கின்ற உருவத் தான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
வம்பின்மலர்க் குழல்உமையாள் மணவா ளன்காண்; மலரவன்,மால், காண்புஅரிய மைந்தன் தான்காண்;கம்பமதக் கரிபிளிற உரிசெய் தோன்காண்; கடல்நஞ்சம் உண்டுஇருண்ட கண்டத் தோன்காண்;அம்பர்நகர்ப் பெரும்கோயில் அமர்கின் றான்காண்; அயவந்தி உள்ளான்காண்; ஐயா றன்காண்;செம்பொன்எனத் திகழ்கின்ற உருவத் தான்காண்; சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

பித்தன்காண் தக்கன்றன் வேள்வி யெல்லாம் பீடழியச் சாடி யருள்கள் செய்தமுத்தன்காண் முத்தீயு மாயி னான்காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்கஅத்தன்காண் புத்தூரி லமர்ந்தான் றான்காண் அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்டசித்தன்காண் சித்தீச் சரத்தான் றான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
பித்தன்காண்; தக்கன்தன்; வேள்வி எல்லாம் பீடுஅழியச் சாடி, அருள்கள் செய்தமுத்தன்காண்; முத்தீயும் ஆயி னான்காண்; முனிவர்க்கும் வானவர்க்கும் முதல்ஆய் மிக்கஅத்தன்காண்; புத்தூரில் அமர்ந்தான் தான்காண்; அரிசில் பெருந்துறையே ஆட்சி கொண்டசித்தன்காண்; சித்தீச் சுரத்தான் தான்காண்; சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

தூயவன்காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண் சிறுமான்கொள் செங்கையெம் பெருமான் றான்காண்ஆயவன்காண் ஆரூரி லம்மான் றான்காண் அடியார்கட் காரமுத மாயி னான்காண்சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
தூயவன்காண்; நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்குஅனைய சோதி யான்காண்;தீஅவன்காண்; தீஅவுணர் புரம்செற் றான்காண்; சிறுமான்கொள் செங்கைஎம் பெருமான் தான்காண்;ஆயவன்காண்; ஆரூரில் அம்மான் தான்காண்; அடியார்கட்கு ஆர்அமுதம் ஆயி னான்காண்;சேயவன்காண்; சேமநெறி ஆயி னான்காண்; சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண் பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்றநீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண் நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட் டேத்துஞ்சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
பார்அவன்காண்; பார்அதனில் பயிர்ஆ னான்காண்; பயிர்வளர்க்கும் துளிஅவன்காண்; துளியில் நின்றநீர்அவன்காண்; நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்; நிலவேந்தர் பரிசுஆக நினைவுஉற்று ஓங்கும்பேரவன்காண்; பிறைஎயிற்று வெள்ளைப் பன்றிப் பிரியாது, பலநாளும் வழிபட்டு, ஏத்தும்சீரவன்காண்; சீர்உடைய தேவர்க்கு எல்லாம் சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண் வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண் வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்ககையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண் காமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
வெய்யவன்காண்; வெய்யகனல் ஏந்தி னான்காண்; வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்;மெய்யவன்காண்; பொய்யர்மனம் விரவா தான்காண்; வீணையோடு இசைந்துமிகு பாடல் மிக்ககையவன்காண்; கையில்மழு ஏந்தி னான்காண்; காமன்அங்கம் பொடிவிழித்த கண்ணி னான்காண்;செய்யவன்காண்; செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

8 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

கலையாரு நூலங்க மாயி னான்காண் கலைபயிலுங் கருத்தன்காண் திருத்த மாகிமலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற மண்ணாகி விண்ணாகி நின்றான் றான்காண்தலையாய மலையெடுத்த தகவி லோனைத் தகர்ந்துவிழ ஒருவிரலாற் சாதித் தாண்டசிலையாரும் மடமகளோர் கூறன் றான்காண் சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
கலைஆரும் நூல்அங்கம் ஆயி னான்காண்; கலைபயிலும் கருத்தன்காண்; திருத்தம் ஆகி,மலைஆகி, மறிகடல்ஏழ் சூழ்ந்து நின்ற மண்ஆகி, விண்ஆகி, நின்றான் தான்காண்;தலைஆய மலைஎடுத்த தகவுஇ லோனைத் தகர்ந்துவிழ, ஒருவிரலால் சாதித்து, ஆண்டசிலைஆரும் மடமகள்ஓர் கூறன் தான்காண்; சிவன்அவன்காண் - சிவபுரத்துஎம் செல்வன் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்