திருமுறை 6 · 6.085 · 10

திருச்சிற்றம்பலம்

திருமுண்டீச்சரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
முண்டீச்சரம்
நாடு
நடுநாடு

1

ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண் புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங் கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளேசேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
ஆர்த்தான்காண், அழல்நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன்காண்; ஆனைத் தோலைப்போர்த்தான்காண்; புரிசடைமேல் புனல்ஏற் றான்காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான்காண்;காத்தான்காண்,- உலகுஏழும் கலங்கா வண்ணம்- கனைகடல்வாய் நஞ்சுஅதனைக் கண்டத்து உள்ளேசேர்த்தான்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கருத்தன்காண் கமலத்தோன் றலையி லொன்றைக் காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னிஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண் ஓருருவின் மூவுருவா யொன்றாய் நின்றவிருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண் மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்றதிருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
கருத்தன்காண்; கமலத்தோன் தலையில் ஒன்றைக் காய்ந்தான்காண்; பாய்ந்தநீர் பரந்த சென்னிஒருத்தன்காண்; உமையவள்ஓர் பாகத் தான்காண்; ஓர்உருவின் மூஉருஆய், ஒன்றாய், நின்றவிருத்தன்காண்; விண்ணவர்க்கும் மேல்ஆ னான்காண்; மெய்அடியார் உள்ளத்தே விரும்பி நின்றதிருத்தன்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண் நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண் ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்கன்பன்காண் ஆரழல தாடி னான்காண் அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
நம்பன்காண், நரைவிடைஒன்று ஏறி னான்காண், நாதன்காண், கீதத்தை நவிற்றி னான்காண்;இன்பன்காண், இமையாமுக் கண்ணி னான்காண், ஏசற்று மனம்உருகும் அடியார் தங்கட்குஅன்பன்காண், ஆர்அழல்அது ஆடி னான்காண், “அவன்,இவன்”என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச்செம்பொன்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண் முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண் கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண் ஆரழலாய் அயற்கரிக்கும் அறிய வொண்ணாத்தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
மூவன்காண்; மூவர்க்கும் முதல்ஆ னான்காண்; முன்னும்ஆய்ப், பின்னும்ஆய், முடிவுஆ னான்காண்;காவன்காண்; உலகுக்குஓர் கண்ஆ னான்காண்; கங்காளன் காண்;கயிலை மலையி னான்காண்;ஆவன்காண்; ஆவகத்துஅஞ்சு ஆடி னான்காண்; ஆர்அழலாய் அயற்குஅரிக்கும் அறிய ஒண்ணாத்தேவன்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண் கனலாட வல்லான்காண் கையி லேந்தும்மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண் வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண் உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
கானவன்காண்; கானவனாய்ப் பொருதான் தான்காண்; கனல்ஆட வல்லான்காண், கையில் ஏந்தும்மானவன்காண், மறைநான்கும் ஆயி னான்காண்; வல்ஏறுஒன்று அதுஏற வல்லான் தான்காண்;ஊனவன்காண், உலகத்துக்கு உயிர்ஆ னான்காண்; உரையவன்காண், உணர்வுஅவன்காண், உணர்ந்தார்க்குஎன்றும்தேன்அவன்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண் ஒழிவற நின்றெங்கு முலப்பி லான்காண்புற்றரவே ஆடையுமாய்ப் பூணு மாகிப் புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினாற்செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
உற்றவன்காண், உறவுஎல்லாம் ஆவான் தான்காண், ஒழிவுஅறநின்று எங்கும் உலப்புஇ லான்காண்,புற்றுஅரவே ஆடையும்ஆய்ப் பூணும் ஆகிப் புறங்காட்டில் எரிஆடல் புரிந்தான் தான்காண்,நற்றவன்காண், அடிஅடைந்த மாணிக்கு ஆக நணுகியதுஓர் பெருங்கூற்றைச் சேவ டியினால்செற்றவன்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி உருண்டோ டத் தொடர்ந்தருக்கன் பல்லை யெல்லாந்தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற தலையவன்காண் மலைமகளாம் உமையைச் சாலமதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
உதைத்தவன்காண், உணராத தக்கன் வேள்வி உருண்டுஓடத்; தொடர்ந்துஅருக்கன் பல்லை எல்லாம்தகர்த்தவன்காண்; தக்கன்தன் தலையைச் செற்ற தலையவன்காண்; மலைமகள்ஆம் உமையைச் சாலமதிப்புஒழிந்த வல்அமரர், மாண்டார், வேள்வி வந்துஅவிஉண் டவரோடும் அதனை எல்லாம்சிதைத்தவன்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

உரிந்தவுடை யார்துவரா லுடம்பை மூடி உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம் பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணைநிரந்துவரும் இருகரையுந் தடவா வோடி நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
உரிந்தஉடை யார்துவரால் உடம்பை மூடி உழிதரும்அவ் ஊமர்அவர் உணரா வண்ணம்பரிந்தவன்காண் - பனிவரைமீப் பண்டம் எல்லாம் பறித்து,உடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை,நிரந்துவரும் இருகரையும் தடவா ஓடி, நின்மலனை வலங்கொண்டு, நீள நோக்கித்திரிந்துஉலவு - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

9 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம் அரும்பொருளாய் நின்றவன்காண் அநங்க னாகம்மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங் கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
அறுத்தவன்காண், அடியவர்கள் அல்லல் எல்லாம்; அரும்பொருள்ஆய் நின்றவன்காண்; அநங்கன் ஆகம்மறுத்தவன்காண்; மலைதன்னை மதியாது ஓடி, மலைமகள்தன் மனம்நடுங்க, வானோர் அஞ்சக்,கறுத்தவனாய்க், கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர்முடியும் கண்ணும் பிதுங்கி ஓடச்செறுத்தவன்காண் - திருமுண்டீச் சுரத்து மேய சிவலோகன் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்