திருமுறை 6 · 6.064 · 11

திருச்சிற்றம்பலம்

திருவேகம்பம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண் கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளைநீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண் நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
கூற்றுவன்காண், கூற்றுவனைக் குமைத்த கோன்காண், குவலயன்காண், குவலயத்தின் நீர்ஆ னான்காண்,காற்றுஅவன்காண், கனல்அவன்காண், கலிக்கும் மின்காண், கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை-நீற்றவன்காண், நிலாஊரும் சென்னி யான்காண், நிறைஆர்ந்த புனல்கங்கை நிமிர்ச டைமேல்ஏற்றவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும் பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண் தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்தமருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண் மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்காதிருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
பரந்தவன்காண், பல்உயிர்கள் ஆகி எங்கும்; பணிந்துஎழுவார் பாவமும் வினையும் போகத்துரந்தவன்காண்; தூமலர்அம் கண்ணி யான்காண்; தோற்றம், நிலை,இறுதிப், பொருள்ஆய் வந்தமருந்துஅவன்காண்; வையகங்கள் பொறைதீர்ப் பான்காண்; மலர்தூவி நினைந்துஎழுவார் உள்ளம் நீங்காதுஇருந்தவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண் நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண் துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண் பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கைஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
நீற்றவன்காண்; நீர்ஆகித் தீஆ னான்காண்; நிறைமழுவும், தமருகமும், எரியும், கையில்-தோற்றவன்காண்; தோற்றக்கேடு இல்லா தான்காண்; துணைஇலிகாண்; துணைஎன்று தொழுவார் உள்ளம்போற்றவன்காண்; புகழ்கள்தமைப் படைத்தான் தான்காண்; பொறிஅரவும், விரிசடைமேல், புனலும் கங்கைஏற்றவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத் தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண் வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத் திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
தாய்அவன்காண், உலகிற்குத்; தன்ஒப்பு இல்லாத் தத்துவன்காண்; “மலைமங்கை பங்கா!” என்பார்வாயவன்காண்; வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண், வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணு ளோர்க்கும்;சேயவன்காண், நினைவார்க்குச்; சித்தம் ஆரத் திருவடியே உள்கிநினைந்து எழுவார் உள்ளம்ஏயவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

5 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

அடுத்தானை யுரித்தான் காண் ... ...... ... ... ...இச்செய்யுளில் எஞ்சிய பாகம் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
அடுத்தானை யுரித்தான் காண் … …. …

6

அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள் பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந் தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்கஇழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
அழித்தவன்காண், எயில்மூன்றும் அயில்வாய் அம்பால்; ஐயாறும் இடைமருதும் ஆள்வான் தான்காண்;பழித்தவன்காண், அடையாரை; அடைவார் தங்கள் பற்றுஅவன்காண்; புற்றுஅரவம் நாணி னான்காண்;சுழித்தவன்காண், முடிக்கங்கை; அடியே போற்றும் தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்கஇழித்தவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண் கடலில்விட முண்டமரர்க் கமுத மீயஇசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
அசைந்தவன்காண், நடம்ஆடிப் பாடல் பேணி; அழல்வண்ணத் தில்(ல்)அடியும் முடியும் தேடப்பசைந்தவன்காண்; பேய்க்கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன்காண்; பரவிநினைந்து எழுவார் தம்பால்கசிந்தவன்காண்; கரியின்உரி போர்த்தான் தான்காண்; கடலில்விடம் உண்டுஅமரர்க்கு அமுதம் ஈயஇசைந்தவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண் பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னிமுடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண் முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னிஇடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
முடித்தவன்காண், வன்கூற்றைச்; சீற்றத் தீயால் வலியார்தம் புரம்மூன்றும் வேவச் சாபம்பிடித்தவன்காண்; பிஞ்ஞகன்ஆம் வேடத் தான்காண்; பிணையல்வெறி கமழ்கொன்றை, அரவு, சென்னிமுடித்தவன்காண்; மூஇலைநல் வேலி னான்காண்; முழங்கிஉரும் எனத்தோன்றும் மழைஆய் மின்னிஇடித்தவன்காண்; எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே
உரை

உரை எழுதப்படவில்லை

9

வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமு மற்று மாகிப்பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண் பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
வரும்தவன்காண்; மனம்உருகி நினையா தார்க்கு வஞ்சகன்காண்; அஞ்சுஎழுத்து நினைவார்க்கு என்றும்மருந்துஅவன்காண்; வான்பிணிகள் தீரும் வண்ணம்; வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகிப்பரந்தவன்காண்; படர்சடைஎட்டு உடையான் தான்காண்; பங்கயத்தோன் தன்சிரத்தை ஏந்தி, ஊர்ஊர்இரந்தவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண் வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பிவிம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண் விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண் அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்றஎம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
“வெம்மான உழுவைஅதள் - உரிபோர்த் தான்காண்; வேதத்தின் பொருளான்காண்” என்றுஇ யம்பி,விம்மாநின்று, அழுவார்கட்கு அளிப்பான் தான்காண்; விடைஏறித் திரிவான்காண்; நடம்செய் பூதத்துஅம்மான்காண்; அகலிடங்கள் தாங்கி னான்காண்; அற்புதன்காண்; சொல்பதமும் கடந்து நின்றஎம்மான்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கைசெறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண் திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
அறுத்தான்காண், அயன்சிரத்தை; அமரர் வேண்ட, ஆழ்கடலின் நஞ்சுஉண்டு,அங்கு அணிநீர்க் கங்கைசெறுத்தான்காண்; தேவர்க்கும் தேவன் தான்காண்; திசைஅனைத்தும் தொழுதுஏத்தக், கலைமான் கையில்பொறுத்தான்காண்; புகல்இடத்தை நலிய வந்து பொருகயிலை எடுத்தவன்தன் முடி,தோள் நால்-அஞ்சு,இறுத்தான்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்