திருமுறை 6 · 6.040 · 10

திருச்சிற்றம்பலம்

திருமழபாடி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
மழபாடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத் திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்றமலையடுத்த மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
அலைஅடுத்த பெருங்கடல்நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள்தம் தலைகாத்த ஐயர்; செம்பொன்-சிலைஎடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத் திரிபுரங்கள் தீஇட்ட செல்வர் போலும்;“நிலைஅடுத்த பசும்பொன்னால், முத்தால், நீண்ட நிரைவயிரப் பலகையால், குவையாய்த் துற்றமலைஅடுத்த மழபாடி வயிரத் தூணே!” என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்தமறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றேகறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக் கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம்மறைகலந்த மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
அறைகலந்த குழல்,மொந்தை, வீணை, யாழும், அந்தரத்தில் கந்தருவர் அமரர் ஏத்த,மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான்ஆளக் கொடுத்தி அன்றே!“கறைகலந்த பொழில்கச்சிக் கம்பம் மேய கனவயிரத் திரள்தூணே! கலிசூழ் மாடம்மறைகலந்த மழபாடி வயிரத் தூணே!” என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்டபரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தேபுரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம் பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
உரம்கொடுக்கும் இருள்மெய்யர், மூர்க்கர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர்தமை உறவாக் கொண்டபரம்கெடுத்து,இங்கு அடியேனை ஆண்டு கொண்ட பவளத்தின் திரள்தூணே! பசும்பொன் முத்தே!“புரம்கெடுத்துப், பொல்லாத காமன் ஆகம் பொடிஆக விழித்துஅருளிப் புவியோர்க்கு என்றும்வரம்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே!” என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டுஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்டமீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும் வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேகவானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
“ஊன்இகந்துஊண் உறிகையர் - குண்டர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர்-உறவு ஆகக் கொண்டுஞான(அ)கம்சேர்ந்து உள்ளவயி ரத்தை நண்ணா நாயேனைப் பொருள்ஆக ஆண்டு கொண்டமீன்அகம்சேர் வெள்ளநீர் விதியால் சூடும் வேந்தனே! விண்ணவர்தம் பெருமான்! மேகவானகம்சேர் மழபாடி வயிரத் தூணே!” என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத் திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்திஉரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன் ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கிநரையேற்ற விடையேறி நாகம் பூண்ட நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டுவரமேற்கும் மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
சிரம்ஏற்ற நான்முகன்தன் தலையும் மற்றைத் திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி,உரம்ஏற்ற இரவிபல் - தகர்த்துச், சோமன் ஒளிர்கலைகள் படஉழக்கி, உயிரை நல்கி,நரைஏற்ற விடைஏறி, நாகம் பூண்ட நம்பியையே, “மறைநான்கும் ஓலம் இட்டுவரம்ஏற்கும் மழபாடி வயிரத் தூணே!” என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள் செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டுதனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித் தயாமூல தன்மவழி யெனக்கு நல்கிமனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
“சினம்திருத்தும் சிறுப்பெரியார் குண்டர் தங்கள் செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன்; தேடிப்புனம்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறிஇலியேன் தனைப்பொருளா ஆண்டு கொண்டு,தனம்திருத்தும் அவர்திறத்தை ஒழியப் பாற்றித், தயாமூல தன்மவழி எனக்கு நல்கி,மனம்திருத்தும் மழபாடி வயிரத் தூணே!” என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப் பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்தவழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
“சுழித்துணைஆம் பிறவிவழித் துக்கம் நீக்கும் சுருள்சடைஎம் பெருமானே! தூய தெண்நீர்இழிப்ப(அ)ரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என்துணையே! என்னுடைய பெம்மான்! தம்மான்!பழிப்ப(அ)ரிய திருமாலும் அயனும் காணாப் பரிதியே! சுருதிமுடிக்கு அணிஆய் வாய்த்த,வழித்துணைஆம், மழபாடி வயிரத் தூணே!” என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.
உரை

உரை எழுதப்படவில்லை

8 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

திருச்சிற்றம்பலம்