திருமுறை 5 · 5.087 · 10

திருச்சிற்றம்பலம்

திருமணஞ்சேரி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
மணஞ்சேரி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ்சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.
சொற்பிரிப்பு
பட்டம் நெற்றியர் பாய்புலித் தோலினர்;நட்டம் நின்று நவில்பவர் நாள்தோறும்சிட்டர் வாழ் திருவார் மணஞ்சேரி எம்வட்ட வார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

துன்னு வார்குழ லாளுமை யாளொடும்பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்மன்னு வார்மணஞ் சேரி மருந்தினைஉன்னு வார்வினை யாயின ஓயுமே.
சொற்பிரிப்பு
துன்னு வார் குழலாள் உமையாளொடும்பின்னு வார்சடை மேல் பிறை வைத்தவர்,மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை,உன்னுவார் வினை ஆயின ஓயுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

புற்றி லாடர வாட்டும் புனிதனார்தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.
சொற்பிரிப்பு
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்;தெற்றினார் புரம் தீ எழச் செற்றவர்-சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்;பற்றினார் அவர் பற்று, அவர்; காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

மத்த மும்மதி யும்வளர் செஞ்சடைமுத்தர் முக்குணர் மூசர வம்மணிசித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம்வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.
சொற்பிரிப்பு
மத்தமும் மதியும் வளர் செஞ்சடைமுத்தர்; முக்குணர் மூசு அரவம் அணிசித்தர்; தீவணர் சீர் மணஞ்சேரி எம்வித்தர்; தாம் விருப்பாரை விருப்பரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

துள்ளு மான்மறி தூமழு வாளினர்வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம்வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே.
சொற்பிரிப்பு
துள்ளு மான்மறி தூமழு வாளினர்;வெள்ள நீர் கரந்தார், சடை மேல் அவர்;அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்வள்ளலார்; கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்ஊர்ப ரந்த உரகம் அணிபவர்சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.
சொற்பிரிப்பு
நீர் பரந்த நிமிர் புன்சடையின் மேல்ஊர் பரந்த உரகம் அணிபவர்சீர் பரந்த திருமணஞ்சேரியார்;ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார்விண்ணத் தம்மதி சூடிய வேதியர்மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார்வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.
சொற்பிரிப்பு
சுண்ணத்தர்; சுடுநீறு உகந்து ஆடலார்;விண்ணத்து அம்மதி சூடிய வேதியர்மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்;வண்ணத்து அம்முலையாள் உமை வண்ணரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

துன்ன வாடையர் தூமழு வாளினர்பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.
சொற்பிரிப்பு
துன்ன ஆடையர் தூ மழு வாளினர்;பின்னும் செஞ்சடை மேல் பிறை வைத்தவர்மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்மன்னனார்; கழலே தொழ வாய்க்குமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்புத்தர் தேரமண் கையர் புகழவேமத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.
சொற்பிரிப்பு
சித்தர், தேவர்கள் மாலொடு, நான்முகன்-புத்தர் தேர் அமண் கையர் - புகழவே,மத்தர் தாம் அறியார், மணஞ்சேரி எம்அத்தனார்; அடியார்க்கு அல்லல் இல்லையே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கடுத்த மேனி அரக்கன் கயிலையைஎடுத்த வனெடு நீண்முடி பத்திறப்படுத்த லுமணஞ் சேரி யருளெனக்கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.
சொற்பிரிப்பு
கடுத்த மேனி அரக்கன், கயிலையைஎடுத்தவன்,நெடு நீள் முடி பத்து இறப்படுத்தலும், மணஞ்சேரி, அருள்! எனக்கொடுத்தனன், கொற்ற வாளொடு நாமமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்