திருமுறை 5 · 5.080 · 10

திருச்சிற்றம்பலம்

திருஅன்பில்ஆலந்துறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
அன்பிலாலந்துறை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வானஞ் சேர்மதி சூடிய மைந்தனைநீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலைஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக்கோனெஞ் செல்வனைக் கூறிட கிற்றியே.
சொற்பிரிப்பு
வானம் சேர்மதி சூடிய மைந்தனைநீ, நெஞ்சே! கெடுவாய் நினைகிற்கிலை;ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறைக்கோன், எம் செல்வனைக் கூறிட கிற்றியே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

கார ணத்தர் கருத்தர் கபாலியார்வார ணத்துரி போர்த்த மணாளனார்ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறைநார ணற்கரி யானொரு நம்பியே.
சொற்பிரிப்பு
காரணத்தர் கருத்தர், கபாலியார்,வாரணத்து உரி போர்த்த மணாளனார்-ஆரணப்பொருள் அன்பில் ஆலந்துறை,நாரணற்கு அரியான் ஒரு நம்பியே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

அன்பினா னஞ்ச மைந்துட னாடியஎன்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்அன்பி லானையம் மானையள் ளூறியஅன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.
சொற்பிரிப்பு
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து, உடன் ஆடியஎன்பின் ஆனை உரித்துக் களைந்தவன்,அன்பிலானை, அம்மானை, அள் ஊறியஅன்பினால் நினைந்தார் அறிந்தார்களே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமைபங்க னாரடி பாவியே னானுய்யஅங்க ணனெந்தை அன்பிலா லந்துறைச்செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.
சொற்பிரிப்பு
சங்கை, உள்ளதும் சாவதும் மெய்; உமைபங்கனார் அடி பாவியேன், நான் உய்ய;அங்கணன், எந்தை அன்பில் ஆலந்துறைச்செங்கணார், அடிச் சேரவும் வல்லனே?
உரை

உரை எழுதப்படவில்லை

5

கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்அக்க ரையினர் அன்பிலா லந்துறைநக்கு ருவரும் நம்மை யறிவரே.
சொற்பிரிப்பு
கொக்கு இறகர் குளிர்மதிச் சென்னியர்,மிக்க அரக்கர் புரம் எரி செய்தவர்,அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறைநக்க உருவரும் நம்மை அறிவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

வெள்ள முள்ள விரிசடை நந்தியைக்கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்அள்ள லார்வயல் அன்பிலா லந்துறைஉள்ள வாறறி யார்சிலர் ஊமரே.
சொற்பிரிப்பு
வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக்கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்;அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறைஉள்ள ஆறு அறியார், சிலர் ஊமரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதேஅறவன் எம்பிரான் அன்பிலா லந்துறைமறவா தேதொழு தேத்தி வணங்குமே.
சொற்பிரிப்பு
பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்,உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே,அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறைமறவாதே, தொழுது ஏத்தி வணங்குமே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

நுணங்கு நூலயன் மாலும் இருவரும்பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலாஅணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறைவணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.
சொற்பிரிப்பு
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலாஅணங்கன், எம்பிரான் அன்பில் ஆலந்துறைவணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக்கையன் மாருரை கேளா தெழுமினோஐயன் எம்பிரான் அன்பிலா லந்துறைமெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.
சொற்பிரிப்பு
பொய்எலாம் உரைக்கும் சமண் சாக்கியக்-கையன்மார் உரை கேளாது எழுமினோ!ஐயன், எம்பிரான் அன்பில் ஆலந்துறைமெய்யன், சேவடி ஏத்துவார் மெய்யரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

இலங்கை வேந்தன் இருபது தோளிற்றுமலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்அலங்கல் எம்பிரான் அன்பிலா லந்துறைவலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.
சொற்பிரிப்பு
இலங்கை வேந்தன் இருபது தோள் இற்றுமலங்க மாமலை மேல் விரல் வைத்தவன்,அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறைவலம் கொள்வாரை வானோர் வலம் கொள்வரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்