திருமுறை 5 · 5.066 · 10

திருச்சிற்றம்பலம்

திருவலஞ்சுழி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
வலஞ்சுழி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஓத மார்கட லின்விட முண்டவன்பூத நாயகன் பொற்கயி லைக்கிறைமாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்பாத மேத்தப் பறையுநம் பாவமே.
சொற்பிரிப்பு
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,பூத நாயகன் பொன் கயிலைக்கு இறை,மாது ஓர் பாகன் வலஞ்சுழி ஈசனைப்,பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப்பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.
சொற்பிரிப்பு
கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்எயில்கள் தீ எழ ஏவல வித்தகன்,மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப்பயில்கிலார் சிலர் பாவித் தொழும்பரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

இளைய காலமெம் மானை யடைகிலாத்துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.
சொற்பிரிப்பு
இளைய காலம் எம்மானை அடைகிலாத்துளை இலாச் செவித் தொண்டர்காள்! நும் உடல்வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்களைகண் ஆகக் கருதி, நீர் உய்ம்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவியஇறைவ னையினி என்றுகொல் காண்பதே.
சொற்பிரிப்பு
நறைகொள் பூம்புனல் கொண்டு எழு மாணிக்காய்க்குறைவு இலாக் கொடுங் கூற்று உதைத்திட்டவன்,மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவியஇறைவனை, இனி என்றுகொல் காண்பதே?
உரை

உரை எழுதப்படவில்லை

5

விண்ட வர்புர மூன்று மெரிகொளத்திண்டி றற்சிலை யாலெரி செய்தவன்வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழிஅண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.
சொற்பிரிப்பு
விண்டவர் புரம் மூன்றும் எரிகொளத்திண்திறல் சிலையால் எரி செய்தவன்,வண்டு பண் முரலும் தண் வலஞ்சுழிஅண்ட னுக்கு, அடிமைத் திறத்து ஆவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடைஅடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்மடந்தை பாகன் வலஞ்சுழி யானடிஅடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே.
சொற்பிரிப்பு
படம்கொள் பாம்பொடு பால் மதியம் சடைஅடங்க ஆள வல்லான், உம்பர் தம்பிரான்,மடந்தை பாகன் வலஞ்சுழியான், அடிஅடைந்தவர்க்கு அடிமைத் திறத்து ஆவனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

நாக்கொண் டுபர வும்மடி யார்வினைபோக்க வல்ல புரிசடைப் புண்ணியன்மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன்ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.
சொற்பிரிப்பு
நாக் கொண்டு பரவும் அடியார் வினைபோக்க வல்ல புரிசடைப் புண்ணியன்,மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன் தன்ஏக்கொளப் புரம் மூன்று எரி ஆனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

தேடு வார்பிர மன்திரு மாலவர்ஆடு பாத மவரும் அறிகிலார்மாட வீதி வலஞ்சுழி யீசனைத்தேடு வானுறு கின்றதென் சிந்தையே.
சொற்பிரிப்பு
தேடுவார், பிரமன் திருமால் அவர்;ஆடு பாதம் அவரும் அறிகிலார்;மாட வீதி வலஞ்சுழி ஈசனைத்தேடுவான் உறுகின்றது, என் சிந்தையே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடைநண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவியபண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.
சொற்பிரிப்பு
கண் பனிக்கும் கை கூப்பும்; "கண் மூன்று உடைநண்பனுக்கு எனை நான் கொடுப்பேன்” எனும்;வண் பொ(ன்)னித் தென் வலஞ்சுழி மேவியபண்பன் இப்பொனைச் செய்த பரிசு இதே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

இலங்கை வேந்தன் இருபது தோளிறநலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான்மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழிவலங்கொள் வாரடி யென்றலை மேலவே.
சொற்பிரிப்பு
இலங்கை வேந்தன் இருபது தோள் இறநலம்கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்மலங்கு பாய் வயல் சூழ்ந்த, வலஞ்சுழிவலம்கொள்வார், அடி என் தலை மேலவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்