திருமுறை 5 · 5.035 · 10

திருச்சிற்றம்பலம்

திருப்பழனம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
பழனம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமைஉருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே.
சொற்பிரிப்பு
அருவனாய் ,அத்தி ஈர் உரி போர்த்து உமைஉருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,பருவரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,திருவினால் திரு வேண்டும், இத் தேவர்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வையம் வந்து வணங்கி வலங்கொளும்ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள்பைகொ ளாடர வார்த்த பழனன்பால்பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.
சொற்பிரிப்பு
வையம் வந்து வணங்கி வலம்கொளும்ஐயனை அறியார், சிலர் ஆதர்கள்;பைகொள் ஆடு அரவு அரை ஆர்த்த பழனன்பால்பொய்யர்; காலங்கள் போக்கிடுவார்களே
உரை

உரை எழுதப்படவில்லை

3

வண்ண மாக முறுக்கிய வாசிகைதிண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியேபண்ணு மாகவே பாடும் பழனத்தான்எண்ணும் நீரவன் ஆயிர நாமமே.
சொற்பிரிப்பு
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகைதிண்ணம் ஆகத் திருச்சடைச் சேர்த்தியேபண்ணும் ஆகவே பாடும், பழனத்தான்;எண்ணும், நீர் அவன் ஆயிரம் நாமமே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிடவாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதிபாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்தார்க்கொண் மாலை சடைக்கரந் திட்டதே.
சொற்பிரிப்பு
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட,வாக்கு அப் பாம்பினைக் கண்ட துணிமதிபாக்கப், பாம்பினைப் பற்றும் பழனத்தான்,தார்க்கொள் மாலை சடைக் கரந்திட்டதே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்கோல முண்ட குணத்தால் நிறைந்ததோர்பாலு முண்டு பழனன்பா லென்னிடைமாலு முண்டிறை யென்றன் மனத்துளே.
சொற்பிரிப்பு
நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர்கோலம் உண்ட குணத்தான்; நிறைந்தது ஓர்பாலும் உண்டு, பழனன் பால்; என்னிடைமாலும் உண்டு, இறை என் தன் மனத்துளே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

மந்த மாக வளர்பிறை சூடியோர்சந்த மாகத் திருச்சடை சாத்துவான்பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே.
சொற்பிரிப்பு
மந்தம் ஆக வளர்பிறை சூடி ஓர்சந்தம் ஆகத் திருச்சடை சாத்துவான்,பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்,எந்தை தாய் தந்தை எம் பெருமானுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்பார்க்க நின்று பரவும் பழனத்தான்தாட்கண் நின்று தலைவணங் கார்களே.
சொற்பிரிப்பு
மார்க்கம் ஒன்று அறியார், மதி இல்லிகள்;பூக் கரத்தின் புரிகிலர், மூடர்கள்;-பார்க்க நின்று பரவும் பழனத்தான்தாள் கண் நின்று தலை வணங்கார்களே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டுதேறு வாரலர் தீவினை யாளர்கள்பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்கூறி னானுமை யாளொடுங் கூடவே.
சொற்பிரிப்பு
ஏறினார் இமையோர்கள் பணி கண்டுதேறுவார் அலர் தீவினையாளர்கள்;பாறினார் பணி வேண்டும் பழனத்தான்கூறினான், உமையாளொடும் கூடவே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான்பற்றி னார்வினை தீர்க்கும் பழனனைஎற்றி னான்மறக் கேனெம் பிரானையே.
சொற்பிரிப்பு
சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான்,பற்றினார் வினை தீர்க்கும் பழனனை,எற்றினான் மறக்கேன், எம் பிரானையே?
உரை

உரை எழுதப்படவில்லை

10

பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறைஅங்க மான இறுத்தருள் செய்தவன்பங்க னென்றும் பழனன் உமையொடுந்தங்கன் றாளடி யேனுடை யுச்சியே.
சொற்பிரிப்பு
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறைஅங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன்,பங்கன், என்றும் பழனன், உமையொடும்தங்கன், தாள் அடியேனுடை உச்சியே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்