திருமுறை 5 · 5.029 · 10

திருச்சிற்றம்பலம்

திருவாவடுதுறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
ஆவடுதுறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழைமறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்பிறைக்க வாலப் பெரும்புனல் ஆவடுதுறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.
சொற்பிரிப்பு
நிறைக்க வாலியள் அல்லள், இந்நேரிழை;மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

தவள மாமதிச் சாயலோர் சந்திரன்பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறைஅளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக்களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.
சொற்பிரிப்பு
தவள மாமதிச் சாயல் ஓர் சந்திரன்-பிளவு சூடிய பிஞ்ஞகன், எம் இறை,அளவு கண்டிலள் ஆவடு தண்துறைக்களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறைஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள்ஆதி ஆவடு தண்டுறை மேவியசோதி யேசுட ரேயென்று சொல்லுமே.
சொற்பிரிப்பு
பாதிப் பெண் ஒரு பாகத்தன்; பல்மறைஓதி; என் உளம் கொண்டவன்; ஒண்பொருள்ஆதி ஆவடு தண்துறை மேவியசோதியே! சுடரே! என்று சொல்லுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்டுறைத்தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.
சொற்பிரிப்பு
கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்;வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள்ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்துறைத்தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்பருகு பாலமு தேயென்னும் பண்பினன்அருகு சென்றிலள் ஆவடு தண்டுறைஒருவன் என்னை யுடையகோ வென்னுமே.
சொற்பிரிப்பு
கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்,பருகு பால் அமுதே எனும் பண்பினன்,அருகு சென்று இவள் ஆவடு தண்துறைஒருவன் என்னை உடைய கோ என்னுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந்தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்அழகன் ஆவடு தண்டுறை யாவெனக்கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.
சொற்பிரிப்பு
குழலும், கொன்றையும் கூவிளம், மத்தமும்,தழலும், தையல் ஓர் பாகமாத் தாங்கினான்;அழகன்; ஆவடு தண்துறையா! எனக்கழலும், கை வளை காரிகையாளுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறைமஞ்ச னோடிவள் ஆடிய மையலே.
சொற்பிரிப்பு
பஞ்சின் மெல்அடிப் பாவை ஓர் பங்கனைத்தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும்அஞ்சுவாள் அல்லள் ஆவடு தண்துறைமஞ்சனோடு இவள் ஆடிய மையலே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

பிறையுஞ் சூடிநற் பெண்ணோடா ணாகியநிறையு நெஞ்சமும் நீர்மையுங் கொண்டவன்அறையும் பூம்பொழில் ஆவடு தண்டுறைஇறைவன் என்னை யுடையவன் என்னுமே.
சொற்பிரிப்பு
பிறையும் சூடி ,நல் பெண்ணொடு ஆண் ஆகி, என்நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்;அறையும் பூம்பொழில் ஆவடு தண்துறைஇறைவன் என்னை உடையவன் என்னுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

வையந் தானளந் தானும் அயனுமாய்மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்ஐயன் ஆவடு தண்டுறை யாவெனக்கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.
சொற்பிரிப்பு
வையம் தான் அளந்தானும் அயனுமாய்மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்;ஐயன்; ஆவடு தண்துறையா! எனக்,கையில் வெள்வளையும் கழல்கின்றதே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்மிக்க வாளரக் கன்வலி வீட்டினான்அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறைநக்கன் என்னுமிந் நாணிலி காண்மினே.
சொற்பிரிப்பு
பக்கம் பூதங்கள் பாடப், பலி கொள்வான்;மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்;அக்கு அணிந்தவன் ஆவடு தண்துறைநக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்