திருமுறை 5 · 5.018 · 10

திருச்சிற்றம்பலம்

திருக்கடம்பந்துறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
கடம்பந்துறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.
சொற்பிரிப்பு
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,"கற்றைச் செஞ்சடையான், கடம்பந்துறைப்பெற்றம் ஊர்தி" என்றாள் எங்கள் பேதையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

தனகி ருந்ததொர் தன்மைய ராகிலும்முனகு தீரத் தொழுதெழு மின்களோகனகப் புன்சடை யான்கடம் பந்துறைநினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.
சொற்பிரிப்பு
தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும்,முனகு தீரத் தொழுது எழுமின்களோ!கனகப் புன்சடையான் கடம்பந்துறைநினைய வல்லவர் நீள் விசும்பு ஆள்வரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

ஆரி யந்தமி ழோடிசை யானவன்கூரி யகுணத் தார்குறி நின்றவன்காரி கையுடை யான்கடம் பந்துறைச்சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.
சொற்பிரிப்பு
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்,கூரிய குணத்தார் குறி நின்றவன்,காரிகை உடையான், கடம்பந்துறைச்,சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனைவண்ண நன்மல ரான்பல தேவருங்கண்ண னும்மறி யான்கடம் பந்துறைநண்ண நம்வினை யாயின நாசமே.
சொற்பிரிப்பு
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை-வண்ண நல் மலரான், பல தேவரும்,கண்ணனும், அறியான் கடம்பந்துறைநண்ண, நம் வினை ஆயின நாசமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

மறைகொண் டம்மனத் தானை மனத்துளேநிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோகறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறைசிறைகொண் டவினை தீரத் தொழுமினே.
சொற்பிரிப்பு
மறை கொண்ட மனத்தானை மனத்துளேநிறைகொண்ட நெஞ்சின் உள் உற வைம்மினோ!கறைகண்டன் உறையும் கடம்பந்துறைசிறை கொண்ட வினை தீரத் தொழுமினே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

நங்கை பாகம்வைத் தந்நறுஞ் சோதியைப்பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோகங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறைஅங்க மோதி அரனுறை கின்றதே.
சொற்பிரிப்பு
நங்கை பாகம் வைத்த நறுஞ் சோதியைப்பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ!கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை,அங்கம் ஓதி அரன் உறைகின்றதே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

அரிய நான்மறை ஆறங்க மாயைந்துபுரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்கரிய கண்டத்தி னான்கடம் பந்துறைஉரிய வாறு நினைமட நெஞ்சமே.
சொற்பிரிப்பு
அரிய நால்மறை ஆறு அங்கமாய், ஐந்துபுரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்;கரிய கண்டத்தினான்; கடம்பந்துறைஉரிய ஆறு நினை, மட நெஞ்சமே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

பூமென் கோதை உமையொரு பாகனைஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறைநாம மேத்தநந் தீவினை நாசமே.
சொற்பிரிப்பு
பூ மென் கோதை உமை ஒரு பாகனைஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்!காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறைநாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பார ணங்கி வணங்கிப் பணிசெயநார ணன்பிர மன்னறி யாததோர்கார ணன்கடம் பந்துறை மேவியஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.
சொற்பிரிப்பு
பார் அணங்கி வணங்கிப் பணிசெயநாரணன் பிரமன் அறியாதது ஓர்காரணன் கடம்பந்துறை மேவியஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறைமேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே.
சொற்பிரிப்பு
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெடப்!பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்;காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறைமேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்