திருமுறை 5 · 5.004 · 10

திருச்சிற்றம்பலம்

திருவண்ணாமலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருக்குறுந்தொகை
தலம்
அண்ணாமலை
நாடு
நடுநாடு

1

வட்ட னைம்மதி சூடியை வானவர்சிட்ட னைத்திரு வண்ணா மலையனைஇட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
வட்டு அனை மதி சூடியை, வானவர்சிட்டனைத், திரு அண்ணாமலையனை,இட்டனை, இகழ்ந்தார் புரம் மூன்றையும்அட்ட னை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

2

வான னைம்மதி சூடிய மைந்தனைத்தேன னைத்திரு வண்ணா மலையனைஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்தஆன னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
வானனை மதி சூடிய மைந்தனைத்,தேனனைத், திரு அண்ணாமலையனை,ஏனனை, இகழ்ந்தார் புரம் மூன்று எய்தஆனனை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

3

மத்த னைம்மத யானை யுரித்தவெஞ்சித்த னைத்திரு வண்ணா மலையனைமுத்த னைமுனிந் தார்புர மூன்றெய்தஅத்த னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
மத்தனை மத யானை உ ரித்த எம்சித்தனைத், திரு அண்ணாமலையனை,முத்தனை ,முனிந்தார் புரம் மூன்று எய்தஅத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

4

காற்ற னைக்கலக் கும்வினை போயறத்தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்தஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
காற்றனைக், கலக்கும் வினை போய் அறத்தேற்றனைத், திரு அண்ணாமலையனைக்,கூற்றனைக், கொடியார் புரம் மூன்று எய்தஆற்றனை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

5

மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்டதென்ன னைத்திரு வண்ணா மலையனைஎன்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்தஅன்ன னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்டதென்னனைத், திரு அண்ணாமலையனை,என்னனை, இகழ்ந்தார் புரம் மூன்று எய்தஅன்னனை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

6

மன்ற னைம்மதி யாதவன் வேள்விமேற்சென்ற னைத்திரு வண்ணா மலையனைவென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
மன்றனை, மதியாதவன் வேள்வி மேல்சென்றனைத், திரு அண்ணாமலையனை,வென்றனை, வெகுண்டார் புரம் மூன்றையும்கொன்றனைக், கொடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

7

வீர னைவிட முண்டனை விண்ணவர்தீர னைத்திரு வண்ணா மலையனைஊர னையுண ரார்புர மூன்றெய்தஆர னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்தீரனைத், திரு அண்ணாமலையனை,ஊரனை, உணரார் புரம் மூன்று எய்தஆரனை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

8

கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந்திருவி னைத்திரு வண்ணா மலையனைஉருவி னையுண ரார்புர மூன்றெய்தஅருவி னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
கருவினைக், கடல்வாய் விடம் உண்ட எம்திருவினைத், திரு அண்ணாமலையனை,உருவினை, உணரார் புரம் மூன்று எய்தஅருவினை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

9

அருத்த னையர வைந்தலை நாகத்தைத்திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்தஅருத்த னையடி யேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்திருத்தனைத், திரு அண்ணாமலையனைக்,கருத்தனைக், கடியார் புரம் மூன்று எய்தஅருத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

10

அரக்க னையல றவ்விர லூன்றியதிருத்த னைத்திரு வண்ணா மலையனைஇரக்க மாயென் உடலுறு நோய்களைத்துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.
சொற்பிரிப்பு
அரக்கனை அலற விரல் ஊன்றியதிருத்தனைத், திரு அண்ணாமலையனை,இரக்கமாய் என் உடல் உறு நோய்களைத்துரக்கனைத், தொண்டனேன் மறந்து உய்வனோ?
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்