திருமுறை 4 · 4.094 · 10

திருச்சிற்றம்பலம்

திருப்பாதிரிப்புலியூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
பாதிரிப்புலியூர்
நாடு
நடுநாடு

1

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்கஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
சொற்பிரிப்பு
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்கஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ்சுற்றாய் அலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்குஉற்றான் உமையவட் கன்பன் திருப்பா திரிப்புலியூர்முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.
சொற்பிரிப்பு
பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்தப் பாரை முற்றும்சுற்றாய் அலைகடல் மூடினும் கண்டேன் புகல் நமக்குஉற்றான் உமையவட்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்முற்றா முளைமதிக் கண்ணியினான் தன மொய்கழலே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங்கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம்புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே.
சொற்பிரிப்பு
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்குஅடையா அவலம் அருவினை சாரா நமனை அஞ்சோம்புடைஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மாயமெல் லாமுற்ற விட்டிருள் நீங்க மலைமகட்கேநேயம் நிலாவ இருந்தா னவன்றன் திருவடிக்கேதேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பா திரிப்புலியூர்மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையுள் நின்றனவே.
சொற்பிரிப்பு
மாயம் எல்லாம் உற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கேநேயம் நிலாவ இருந்தான் அவன் தன் திருவடிக்கேதேயம் எல்லா நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்மேய நல்லான் மலர்ப் பாதம் என் சிந்தையுள் நின்றனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்அத்தன் அருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே.
சொற்பிரிப்பு
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்று இருக்கின் அல்லால்,மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்அத்தன் அருள்பெறல் ஆமோ அறிவு இலாப் பேதை நெஞ்சே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளாற்திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
சொற்பிரிப்பு
கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்உருவாய்த் தெரிந்து உன் தன் நாமம் பயின்றேன் உனது அருளால்திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறு அணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

எண்ணா தமரர் இரக்கப் பரவையுள் நஞ்சமுண்டாய்திண்ணார் அசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனேபண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்கண்ணார் நுதலாய் கழல்நங் கருத்தில் உடையனவே.
சொற்பிரிப்பு
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனேபண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தேவழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தேதொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.
சொற்பிரிப்பு
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தேவழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ் வையகத்தேதொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்செழுநீர்ப் புனல்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சேதிண்பால் நமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க்கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.
சொற்பிரிப்பு
மண் பாதலம் புக்கு மால்கடல் மூடி மற்று ஏழ் உலகும்விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சேதிண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க்கண்பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

திருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்திதருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்தபொருந்தா அரக்கன் உடல்நெரித் தாய்பா திரிப்புலியூர்இருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.
சொற்பிரிப்பு
திருந்தா அமணர் தம் தீ நெறிப் பட்டுத் திகைத்து முத்திதரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்தபொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர்இருந்தாய் அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்