திருமுறை 4 · 4.092 · 20

திருச்சிற்றம்பலம்

திருவையாறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டுபந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றிஅந்திப் பிறையணிந் தாடும்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
சிந்திப்பு அரியன சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன்முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டுபந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றிஅந்திப் பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன என்மனத்தேபொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க்கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென்றழித்தன ஆறங்க மானஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தேபொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய்க்கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியைக் கீழ முன் சென்றுஅழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய்கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத்துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க்கணியன சேயன தேவர்க்கை யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
மணி நிறம் ஒப்பன பொன்நிறம் மன்னின மின் இயல்வாய்கணிநிறம் அன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத்துணிவன சீலத்தர் ஆகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்குஅணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

இருள்தரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்பொருள்தரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்தகுருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
இருள் தரு துன்பப் படலம் மறைப்ப மெய்ஞ் ஞானம் என்னும்பொருள்தரு கண் இழந்து உண்பொருள் நாடிப் புகல் இழந்தகுருடரும் தம்மைப் பரவக் கொடுநரகக் குழி நின்றுஅருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

எழுவாய் இறுவாய் இலாதன வெங்கட் பிணிதவிர்த்துவழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய்விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போடழுவார்க் கமுதங்கள் காண்கஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்துவழுவா மருத்துவம் ஆவன மாநரகக் குழிவாய்விழுவார் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடுஅழுவார்க்கு அமுதங்கள் காண்க ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மைஇன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலேபொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய்பொருந்தாஅன்பர்க் கணியன காண்கஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்ட தொண்டர் தம்மைஇன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலேபொன்பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும் அப் பொய் பொருந்தாஅன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்குளித்துத் தொழுதுமுன் நின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்பஅளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
களித்துக் கலந்ததோர் காதல் கசிவொடு காவிரிவாய்க்குளித்துத் தொழுது முன் நின்ற இப் பத்தரைக் கோதில் செந்தேன்தெளித்துச் சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்பஅளித்துப் பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலைவருத்திக் கடிமலர் வாளெடுத் தோச்சி மருங்குசென்றுவிருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால்அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்து உடலைவருத்திக் கடிமலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்றுவிருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால்அருத்தித்து அருந்தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க்கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட்டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
பாடும் பறண்டையும் ஆந்தையும் ஆர்ப்பப் பரந்து பல்பேய்க்கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்நீடும் குழல் செய்ய வையம் நெளிய நிணப் பிணக்காட்டுஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

நின்போல் அமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்தபைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியாஎன்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம்அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்த்து உகுத்தபைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன பாங்கு அறியாஎன்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம்அம்போது எனக் கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னிநிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப்புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும்அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
மலையான் மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னிநிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள்நிலத்துப்புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும்அலை ஆர் புனல்பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

12

பொலம்புண் டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார்புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனையாள்சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும்அலம்பும் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
பொலம் புண்டரீகப் புதுமலர் போல்வன போற்றி என்பார்புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன்அனையாள்சிலம்பும் செறிபாடகமும் செழுங்கிண் கிணித்திரளும்அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

13

உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னூல்கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்யகிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும்அற்றார்க் கரும்பொருள் காண்கஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
உற்றார் இலாதார்க்கு உறுதுணை ஆவன ஓதி நன்னூல்கற்றார் பரவப் பெருமை உடையன காதல் செய்யகிற்பார் தமக்குக் கிளர் ஒளி வானகம் தான் கொடுக்கும்அற்றார்க்குஅரும்பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

14

வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன மந்திரிப்பார்ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன உத்தமர்க்குஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்சஆனை யுரித்தன காண்கஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
வானைக் கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார்ஊனைக் கழித்து உய்யக் கொண்டு அருள் செய்வன உத்தமர்க்குஞானச் சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்சஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

15

மாதர மானில மாவன வானவர் மாமுகட்டின்மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார்தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க்காதர மாவன காண்கஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
மாதரம் மாநிலம் ஆவன வானவர் மாமுகட்டின்மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார்தூதரை ஓடத் துரப்பன துன்பு அறத் தொண்டுபட்டார்க்குஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

16

பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால்ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல்மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னிஆணிக் கனகமு மொக்கும்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
பேணித் தொழும் அவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு அருளால்ஏணிப் படி நெறி இட்டுக் கொடுத்து இமையோர் முடிமேல்மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னிஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

17

ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்தவேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணுஞ்சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோடாதியும் அந்தமு மானஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலி சிறந்தவேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்சோதிஅம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன தூமதியோடுஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

18

சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண்டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்றுவணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போதணங்கும் அரவிந்த மொக்கும்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடு வண்டுஅணங்கும் குழலி அணிஆர் வளைக்கரம் கூப்பி நின்றுவணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண்போதுஅணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

19

சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும்நிழலா வனவென்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக்கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்தஅழலார் ஒளியன காண்கஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும்நிழல் ஆவன என்றும் நீங்காப் பிறவி நிலைகெடுத்துக்கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்தஅழல் ஆர் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

20

வலியான் றலைபத்தும் வாய்விட் டலற வரையடர்த்துமெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கள்முன்னேபலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலர்இகழஅலியா நிலைநிற்கும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே.
சொற்பிரிப்பு
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்துமெலியா வலி உடைக் கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னேபலிசேர் படுகடைப் பார்த்துப் பல் நாளும் பலர் இகழஅலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்