திருமுறை 4 · 4.082 · 10

திருச்சிற்றம்பலம்

திருக்கழுமலம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
சீர்காழி - 12-கழுமலம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம்நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியங்கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க்காளன்றி மற்றுமுண் டோ அந்த ணாழி அகலிடமே.
சொற்பிரிப்பு
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்நாலஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர்மதியம்கால்கொண்ட வண்கைச் சடைவிரித்து ஆடும் கழுமலவர்க்குஆள் அன்றி மற்றும் உண்டோ அம்தண் ஆழி அகலிடமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்கஉடையா னுடைதலை மாலையுஞ் சூடி உகந்தருளிவிடைதா னுடையவவ் வேதியன் வாழுங் கழுமலத்துள்அடைவார் வினைக ளவையெள்க நாடொறும் ஆடுவரே.
சொற்பிரிப்பு
கடைஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்கஉடையான் உடைதலை மாலையும் சூடி உகந்தருளிவிடைதான் உடைய அவ் வேதியன் வாழும் கழுமலத்துள்அடைவார் வினைகள் அவை எள்க நாள்தொறும் ஆடுவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

திரைவாய்ப் பெருங்கடல் முத்தங் குவிப்ப முகந்துகொண்டுநுரைவாய் நுளைச்சிய ரோடிக் கழுமலத் துள்ளழுந்தும்விரைவாய் நறுமலர் சூடிய விண்ணவன் றன்னடிக்கேவரையாப் பரிசிவை நாடொறும் நந்தமை யாள்வனவே.
சொற்பிரிப்பு
திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டுநுரைவாய் நுளைச்சியர் ஓடிக் கழுமலத்துள் அழுந்தும்விரைவாய் நறுமலர் சூடிய விண்ணவன் தன் அடிக்கேவரையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

விரிக்கும் அரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல்உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர் கேட்கில் உலகமுற்றும்இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக் கழுமலவன்நிருத்தம் பழம்படி யாடுங் கழல்நம்மை ஆள்வனவே.
சொற்பிரிப்பு
விரிக்கும், அரும்பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல்உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும்இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக் கழுமலவன்நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

சிந்தித் தெழுமன மேநினை யாமுன் கழுமலத்தைப்பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானைப் பசுபதியைச்சந்தித்த கால மறுத்துமென் றெண்ணி யிருந்தவர்க்குமுந்தித் தொழுகழல் நாடொறும் நந்தம்மை ஆள்வனவே.
சொற்பிரிப்பு
சிந்தித்து எழுமனமே நினையா முன் கழுமலத்தைப்பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானைப் பசுபதியைச்சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்குமுந்தித் தொழுகழல் நாள்தொறும் நம் தம்மை ஆள்வனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நிலையும் பெருமையும் நீதியுஞ் சால அழகுடைத்தாய்அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தவித் தோணிபுரஞ்சிலையில் திரிபுரம் மூன்றெரித் தார்தங் கழுமலவர்அலருங் கழலடி நாடொறும் நந்தமை ஆள்வனவே.
சொற்பிரிப்பு
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய்அலையும் பெருவெள்ளத்து அன்று மிதந்த இத்தோணிபுரம்சிலையில் திரிபுரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர்அலரும் கழலடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

முற்றிக் கிடந்துமுந் நீரின் மிதந்துடன் மொய்த்தமரர்சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது சூழரவந்தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண் திங்கள்சூடுங்கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய கழுமலமே.
சொற்பிரிப்பு
முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்துடன் மொய்த்து அமரர்சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது சூழ் அரவம்தெற்றிக் கிடந்து வெங் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும்கற்றைச் சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்துள்ளேஅடையும் உனைவந் தடைந்தார் அமரர் அடியிணைக்கீழ்நடையும் விழவொடு நாடொறும் மல்கும் கழுமலத்துள்விடையன் தனிப்பதம் நாடொறும் நந்தமை ஆள்வனவே.
சொற்பிரிப்பு
உடலும் உயிரும் ஒரு வழிச் செல்லும் உலகத்து உள்ளேஅடையும் உனைவந்து அடைந்தார் அமரர் அடி இணைக்கீழ்நடையும் விழவொடு நாள்தொறும் மல்கும் கழுமலத்துள்விடையன் தனிப்பதம் நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பரவைக் கடல்நஞ்ச முண்டது மில்லையிப் பார்முழுதும்நிரவிக் கிடந்து தொழப்படு கின்றது நீண்டிருவர்சிரமப் படவந்து சார்ந்தார் கழலடி காண்பதற்கேஅரவக் கழலடி நாடொறும் நந்தமை ஆள்வனவே.
சொற்பிரிப்பு
பரவைக் கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இப்பார் முழுதும்நிரவிக் கிடந்து தொழப்படு கின்றது நீண்டு இருவர்சிரமப் பட வந்து சார்ந்தார் கழல்அடி காண்பதற்கேஅரவக் கழலடி நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கரையார் கடல்சூழ் இலங்கையர் கோன்றன் முடிசிதறத்தொலையா மலரடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்துத்தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் கழுமலங் காண்பதற்கேஅலையாப் பரிசிவை நாடொறும் நந்தமை ஆள்வனவே.
சொற்பிரிப்பு
கலைஆர் கடல்சூழ் இலங்கையர் கோன் தன் முடி சிதறத்தொலையா மலர்அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்துத்தலையாய்க் கிடந்து உயர்ந்தான் தன் கழுமலம் காண்பதற்கேஅலையாப் பரிசு இவை நாள்தொறும் நம் தமை ஆள்வனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்