திருமுறை 4 · 4.066 · 10

திருச்சிற்றம்பலம்

திருநாகேச்சரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
நாகேச்சுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும்பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாளர் போலும்இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலுந் தம்மைநச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும்பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும்இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மைநச்சுவார்க்கு இனியர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலுங்காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கைசேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்லநாடறி புகழர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும்காடுறு பதியர் போலும் கடிபுனல் கங்கை நங்கைசேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்லநாடு அறி புகழர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும்பொற்றுணைப் பாதர் போலும் புலியத ளுடையார் போலுஞ்சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழு வார்கட் கெல்லாம்நற்றுணை யாவர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
கல் துணை வில் அது ஆகக் கடி அரண் செற்றார் போலும்பொன் துணைப் பாதர் போலும் புலி அதள் உடையர் போலும்சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்நல் துணை ஆவர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலுஞ்செம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும்எம்பிரான் எம்மை யாளும் இறைவனே என்று தம்மைநம்புவார்க் கன்பர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும்செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திரு நீற்றர் போலும்எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மைநம்புவார்க்கு அன்பர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கடகரி யுரியர் போலுங் கனல்மழு வாளர் போலும்படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக்குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்நடநவில் அடிகள் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும்பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடிக்குடம் உடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்நடம் நவில் அடிகள் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும்மறையுறு மொழியர் போலும் மால்மறை யவன்ற னோடுமுறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்றநறவமர் கழலர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
பிறை உறு சடையர் போலும் பெண் ஒரு பாகர் போலும்மறை உறு மொழியர் போலும் மால் மறையவன் தன்னோடுமுறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்றநறவு அமர் கழலர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலுங்குஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும்விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்தெ ழுந்தநஞ்சணி மிடற்றர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும்;குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினைக் குமைப்பர் போலும்விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்து எழுந்தநஞ்சு அணி மிடற்றர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப்பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும்நாகநா ணுடையர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
போகம் ஆர் மோடி கொங்கை புணர் தரு புனிதர் போலும்வேகமார் விடையர் போலும் வெண்பொடி ஆடும் மேனிப்பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும்நாகம் நாண் உடையர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்அக்கு அரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும்வக்கரை அமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்நக்கரை உருவர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

வின்மையாற் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்குந் தலைவர் போலும்வன்மையான் மலையெ டுத்தான் வலியினைத் தொலைவித் தாங்கேநன்மையால் அளிப்பர் போலும் நாகஈச் சரவ னாரே.
சொற்பிரிப்பு
வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்வன்மையால் மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து ஆங்கேநன்மையால் அளிப்பர் போலும் நாக ஈச்சுரவனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்