திருமுறை 4 · 4.059 · 10

திருச்சிற்றம்பலம்

திருஅவளிவணல்லூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
அவளிவணல்லூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்றுவீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன்ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத்தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரும் என்றுவீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன் தன்ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வெம்பினா ரரக்க ரெல்லாம் மிகச்சழக் காயிற் றென்றுசெம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்னநம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கிஅம்பினால் அழிய வெய்தார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
வெம்பினார் அரக்கர் எல்லாம் மிகச் சழக்கு ஆயிற்று என்றுசெம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும் என்னநம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கிஅம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கீழ்ப்படக் கருத லாமோ கீர்த்திமை யுள்ள தாகிற்தோட்பெரு வலியி னாலே தொலைப்பன்யான் மலையை யென்றுவேட்பட வைத்த வாறே விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்துஆட்படக் கருதிப் புக்கார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
கீழ்ப்படக் கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளது ஆகில்தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்றுவேள்பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்துஆட்படக் கருதிப் புக்கார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

நிலைவலம் வல்ல னல்லன் நேர்மையை நினைய மாட்டான்சிலைவலங் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்தலைவலங் கருதிப் புக்குத் தாக்கினான் தன்னை யன்றுஅலைகுலை யாக்கு வித்தார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
நிலை வலம் வல்லன் அல்லன் நேர்மையை நினைய மாட்டான்சிலைவலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்தலை வலம் கருதிப் புக்குத் தாங்கினான் தன்னை அன்றுஅலை குலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலேமெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்துசெவ்வலி கூர்வி ழியாற் சிரமத்தான் எடுக்குற் றானைஅவ்வலி தீர்க்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
தவ்வலி ஒன்றன் ஆகித் தனது ஒரு பெருமையாலேமெய்வ்வலி உடையன் என்று மிகப் பெருந் தேரை ஊர்ந்துசெவ்வலி கூர் விழியான் சிரமத்தால் எடுக்குற்றானைஅவ்வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

நன்மைதான் அறிய மாட்டான் நடுவிலா அரக்கர் கோமான்வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்த லுற்றுக்கன்மையான் மலையை யோடிக் கருதித்தான் எடுத்து வாயால்அம்மையோ வென்ன வைத்தார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
நன்மை தான் அறிய மாட்டான் நடுஇலா அரக்கர் கோமான்வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்தல் உற்றுக்கன்மையால் மலையை ஓடிக் கருதித் தான் எடுத்து வாயால்அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

கதம்படப் போது வார்கள் போதுமக் கருத்தி னாலேசிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரு மென்றுமதம்படு மனத்த னாகி வன்மையான் மிக்கு நோக்கஅதம்பழத் துருவு செய்தார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
கதம் படப் போதுவார்கள் போதும் அக்கருத்தினாலேசிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரும் என்றுமதம்படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்கஅதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

நாடுமிக் குழிதர் கின்ற நடுவிலா அரக்கர் கோனைஓடுமிக் கென்று சொல்லி ஊன்றினான் உகிரி னாலேபாடுமிக் குய்வ னென்று பணியநற் றிறங்கள் காட்டிஆடுமிக் கரவம் பூண்டார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர் கோனைஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலேபாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டிஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஏனமா யிடந்த மாலும் எழில்தரு முளரி யானும்ஞானந்தா னுடைய ராகி நன்மையை அறிய மாட்டார்சேனந்தான் இலாவ ரக்கன் செழுவரை எடுக்க வூன்றிஆனந்த அருள்கள் செய்தார் அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
ஏனம் ஆய்க் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும்ஞானம் தான் உடையர் ஆகி நன்மையை அறிய மாட்டார்சேனம் தான் இலா அரக்கன் செழுவரை எடுக்க ஊன்றிஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

ஊக்கினான் மலையை யோடி உணர்விலா அரக்கன் றன்னைத்தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றிநோக்கினான் அஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லிஆக்கினார் அமுத மாக அவளிவ ணல்லூ ராரே.
சொற்பிரிப்பு
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன் தன்னைத்தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றிநோக்கினார் அஞ்சத் தன்னை நோன்பு இற ஊன்று சொல்லிஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்