திருமுறை 4 · 4.050 · 2

திருச்சிற்றம்பலம்

திருக்குறுக்கை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
குறுக்கை வீரட்டம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ளஅடியொடு முடியுங் காணார் அருச்சுனற் கம்பும் வில்லுந்துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக்கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.
சொற்பிரிப்பு
நெடியமால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ளஅடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும்துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்கொடி நெடுந் தேர் கொடுத்தார் குறுக்கை வீரட்டனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

ஆத்தமாம் அயனு மாலும் அன்றிமற் றொழிந்த தேவர்சோத்தமெம் பெருமான் என்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத்தீர்த்தமாம் அட்ட மீமுன் சீருடை ஏழு நாளுங்கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.இப்பதிகத்தில் ஏனைய பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
ஆத்தமாம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர்சோத்தம் எம் பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்லத்தீர்த்தமாம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்கூத்தராய் வீதி போந்தார் குறுக்கை வீரட்டனாரே.

திருச்சிற்றம்பலம்