திருமுறை 4 · 4.036 · 10

திருச்சிற்றம்பலம்

திருப்பழனம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருநேரிசை
தலம்
பழனம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாளைக்கூடினா ரொருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்சூடினா ரொருவர் போலுந் தூயநன் மறைகள் நான்கும்பாடினா ரொருவர் போலும் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளைக்கூடினார் ஒருவர் போலும் குளிர்புனல் வளைந்த திங்கள்சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும்பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்கூவல்தான் அவர்கள் கேளார் குணமிலா ஐவர் செய்யும்பாவமே தீர நின்றார் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
போவது ஓர் நெறியும் ஆனார் புரிசடைப் புனிதனார் நான்வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்கூவல் தான் அவர்கள் கேளார் குணம்இலா ஐவர் செய்யும்பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித்தொண்டர்கள் பாடி யாடித் தொழுகழற் பரம னார்தாம்விண்டவர் புரங்க ளெய்த வேதியர் வேத நாவர்பண்டையென் வினைகள் தீர்ப்பார் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
கண்டராய் முண்டர் ஆகிக் கையில் ஓர் கபாலம் ஏந்தித்தொண்டர்கள் பாடி ஆடித் தொழுகழல் பரமனார் தாம்விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர்பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

நீரவன் தீயி னோடு நிழலவன் எழில தாயபாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரம யோகியாரவ னண்ட மிக்க திசையினோ டொளிக ளாகிப்பாரகத் தமுத மானார் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
நீர் அவன் தீயினோடு நிழலவன் எழிலது ஆயபாரவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரம யோகிஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப்பார் அகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

ஊழியா ரூழி தோறும் உலகினுக் கொருவ ராகிப்பாழியார் பாவந் தீர்க்கும் பராபரர் பரம தாயஆழியான் அன்னத் தானும் அன்றவர்க் களப் பரியபாழியார் பரவி யேத்தும் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
ஊழியார் ஊழி தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆயஆழியான் அன்னத் தானும் அன்று அவர்க்கு அளப்பரிய,பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

ஆலின்கீழ் அறங்க ளெல்லாம் அன்றவர்க் கருளிச் செய்துநூலின்கீ ழவர்கட் கெல்லா நுண்பொரு ளாகி நின்றுகாலின்கீழ்க் காலன் றன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்பாலின்கீழ் நெய்யு மானார் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச் செய்துநூலின் கீழ் அவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்றுகாலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால்பு தனும்போதித்து நின்று லகிற் போற்றிசைத் தாரி வர்கள்சோதித்தா ரேழு லகுஞ் சோதியுட் சோதி யாகிப்பாதிப்பெண் ணுருவ மானார் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புதனும்போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள்சோதித்தார் ஏழு உலகும் சோதியுள் சோதி ஆகிப்பாதிப்பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த ஈசர்தோற்றனார் கடலுள் நஞ்சைத் தோடுடைக் காதர் சோதிஏற்றினார் இளவெண் டிங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்பாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
கால் தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்தோற்றனார் கடலுள் நஞ்சைத் தோடுடைக் காதர் சோதிஏற்றினார் இளவெண் திங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

கண்ணனும் பிரம னோடு காண்கில ராகி வந்தேஎண்ணியுந் துதித்து மேத்த எரியுரு வாகி நின்றுவண்ணநன் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்பண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தேஎண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்றுவண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

குடையுடை அரக்கன் சென்று குளிர்கயி லாய வெற்பின்இடைமட வரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கிவிடையுடை விகிர்தன் றானும் விரலினா லூன்றி மீண்டும்படைகொடை அடிகள் போலும் பழனத்தெம் பரம னாரே.
சொற்பிரிப்பு
குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின்இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கிவிடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்