திருமுறை 4 · 4.017 · 11

திருச்சிற்றம்பலம்

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
இந்தளம்
தலம்
ஆரூர் அரநெறி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

எத்தீ புகினும் எமக்கொரு தீதிலைதெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்தத்தீ நிறத்தார் அரநெறி யாரே.
சொற்பிரிப்பு
எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலைதெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்முத் தீ அனையது ஓர் மூ இலை வேல் பிடித்துஅத் தீ நிறத்தார் அரநெறியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

வீரமும் பூண்பர் விசயனொ டாயதொர்தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரரவாரமும் பூண்பர் அரநெறி யாரே.
சொற்பிரிப்பு
வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஓர்தாரமும் பூண்பர் தமக்கு அன்பு பட்டவர்பாரமும் பூண்பர் நல் பைங்கண் மிளிர் அரவுஆரமும் பூண்பர் அரநெறியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமொர்வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடுந்துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே.
சொற்பிரிப்பு
தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமும் ஒர்வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும்துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும்அஞ்ச வண்ணத்தர் அரநெறியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.
சொற்பிரிப்பு
விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்றுஇழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும்அழித்தனர் ஆரூர் அரநெறியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந்தற்றவர் தம்வினை யானவெல் லாமறஅற்றவர் ஆரூர் அரநெறி கைதொழஉற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.
சொற்பிரிப்பு
துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம்தற்றவர் தம் வினை ஆன எல்லாம்அறஅற்றவர் ஆரூர் அரநெறி கை தொழஉற்றவர் தாம் ஒளி பெற்றனர் தாமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கூடர வத்தர் குரற்கிண் கிணியடிநீடர வத்தர்முன் மாலை யிடையிருள்பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித்தாடர வத்தர் அரநெறி யாரே.
சொற்பிரிப்பு
கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடிநீடு அரவத்தர் முன் மாலை இடை இருள்பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்துஆடு அரவத்தர் அரநெறியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்ஆடவல் லார்திரு வாரூர் அரநெறிநாடவல் லார்வினை வீடவல் லாரே.
சொற்பிரிப்பு
கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும்பாடவல்லார் பயின்று அந்தியும் சந்தியும்ஆடவல்லார் திரு ஆரூர் அரநெறிநாடவல்லார் வினை வீட வல்லாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றைமாலையுங் கண்ணியு மாவன சேவடிகாலையு மாலையுங் கைதொழு வார்மனம்ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே.
சொற்பிரிப்பு
பாலை நகு பனி வெண்மதி பைங்கொன்றைமாலையும் கண்ணியும் ஆவன சேவடிகாலையும் மாலையும் கை தொழுவார் மனம்ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயிறடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே.
சொற்பிரிப்பு
முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின்பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செஞ்ஞாயிறுஅடிவண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்அன்னவர் ஆரூர் அரநெறி யாரே.
சொற்பிரிப்பு
பொன் நவில் புன்சடையான் அடியின் நிழல்இன் அருள் சூடி எள்காதும் இராப்பகல்மன்னவர் கின்னரர் வானவர் தாம் தொழும்அன்னவர் ஆரூர் அரநெறியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்டமருள்மன் னனையெற்றி வாளுட னீந்துகருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்டஅருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே.
சொற்பிரிப்பு
பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்டமருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்துகருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்டஅருள் மன்னர் ஆரூர் அரநெறியாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்