திருமுறை 4 · 4.008 · 10

திருச்சிற்றம்பலம்

சிவனெனுமோசை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
பொது
நாடு
பொது

1

சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதேஅவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவங்கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.
சொற்பிரிப்பு
சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில் திருநின்ற செம்மை உளதேஅவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனுந்திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக அருள்கார ணத்தில் வருவார்எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்லர் இவரே.
சொற்பிரிப்பு
விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும்திரிதரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்;அரிதரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார்;எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலொர் திங்கள் திலகம் பதித்த நுதலர்காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர் கரிகாடர் காலொர் கழலர்வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய மழுவீசி வேழவுரி போர்த்தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும் இதுதா னிவர்க்கொ ரியல்பே.
சொற்பிரிப்பு
தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர்;காய்கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்;வேய் உடன் ஆடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து,ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இது தான் இவர்க்கு ஒர் இயல்பே
உரை

உரை எழுதப்படவில்லை

4

வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி வடிதோலும் நூலும் வளரக்கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர் கிளர்காடு நாடு மகிழ்வர்நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய லவள்தோன்று வாய்மை பெருகிக்குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி யுளள்போல் குலாவி யுடனே.
சொற்பிரிப்பு
வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடிதோலும் நூலும் வளரக்,கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்;நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயல் அவள் தோன்று வாய்மை பெருகிக்,குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர் விடையூர்வ தோடு கலனாஇறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச ரொருபா லிசைந்த தொருபால்பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை பிறழ்பாட நின்று பிணைவான்அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை கடவா தமர ருலகே.
சொற்பிரிப்பு
உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்; விடை ஊர்வது; ஓடு கலனா;இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர் ஒருபால் இசைந்தது; ஒருபால்,பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்;அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது, அமரர் உலகே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி கழல்கால் சிலம்ப அழகார்அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண மியலா ரொருவ ரிருவர்மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை மலையான் மகட்கு மிறைவர்அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம் அவர்வண்ண வண்ணம் அழலே.
சொற்பிரிப்பு
கணிவளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல் கால் சிலம்ப, அழகு ஆர்அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார்; ஒருவர்; இருவர்;மணி கிளர் மஞ்ஞை ஆல, மழை ஆடு சோலை மலையான் மகட்கும் இறைவர்;அணிகிளர் அன்ன வண்ணம், அவள் வண்ண வண்ணம்; அவர் வண்ண வண்ணம், அழலே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

நகைவளர் கொன்றைதுன்று நகுவெண் டலையர் நளிர்கங்கை தங்கு முடியர்மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல கறைகொள் மணிசெய் மிடறர்முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு மெரியாடு மாறு மிவர்கைப்பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு மிதுபோலும் ஈச ரியல்பே.
சொற்பிரிப்பு
நகைவளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர்;மிகைவளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணி செய் மிடறர்;முகை வளர் கோதை மாதர் முனிபாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப்பகை வளர் நாகம் வீசி, மதி அங்குமாறும் இது போலும், ஈசர் இயல்பே
உரை

உரை எழுதப்படவில்லை

8

ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற னுடல்வெந்து வீய சுடர்நீறணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர் தமியா ரொருவ ரிருவர்களிகிளர் வேடமுண்டொர் கடமா வுரித்த உடைதோல் தொடுத்த கலனார்அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக எழில்வேத மோது மவரே.
சொற்பிரிப்பு
ஒளிவளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறுஅணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்;களிகிளர் வேடம் உண்டு, ஓர் கட மா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்-அணிகிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதும் அவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாள ராகி மகிழ்வர்தலைகல னாகவுண்டு தனியே திரிந்து தவவாண ராகி முயல்வர்விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த அழல்நஞ்ச முண்ட வவரே.
சொற்பிரிப்பு
மலை மட மங்கையோடும், வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்;தலை கலன் ஆக உண்டு, தனியே திரிந்து, தவவாணர் ஆகி முயல்வர்;விலை இலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

புதுவிரி பொன்செயோலை யொருகாதொர் காது சுரிசங்க நின்று புரளவிதிவிதி வேதகீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால்மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர் குழல்பாக மாக வருவர்இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம் எழில்வண்ண வண்ண மியல்பே.
சொற்பிரிப்பு
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது,ஒர் காது சுரி சங்கம் நின்று புரள,விதிவிதி வேதகீதம் ஒருபாடும் ஓத, ஒருபாடு மெல்ல நகுமால்;மது விரி கொன்றை துன்று சடைபாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்;இது இவர் வண்ணவண்ணம்; இவள் வண்ண வண்ணம்; எழில் வண்ண வண்ணம், இயல்பே!
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்