திருமுறை 3 · 3.090 · 11

திருச்சிற்றம்பலம்

திருத்துருத்தியும்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
துருத்தி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற்தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள்பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைமல்கு சடைமுடியார்நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்வீறுசேர் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர்நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்குசடைமுடியார்நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மழைவளர் இளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேற்கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்இழைவளர் துகிலல்குல் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்விழைவளர் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல்கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம்,இழை வளர் துகில் அல்குல் அரிவை யோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்தசுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்அரும்பன வனமுலை அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்விரும்பிடந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்தசுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க் கொன்றை அம் சுடர்ச் சடையார்அரும்பு அன வனமுலை அரிவை யோடு ஒரு பகல் அமர்ந்தபிரான்,விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவுங்களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாந்துளங்குநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள் அரவும்களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல், கபாலியார்தாம்,துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பொறியுலாம் அடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும்நெறியுலாம் பலிகொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்மறியுலாங் கையினர் மங்கையோ டொருபகல் அமர்ந்தபிரான்வெறியுலாந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
பொறி உலாம் அடு புலி உரிவையர், வரிஅராப் பூண்டு இலங்கும்நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு அரியார்மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்துதிரிதரும் இயல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்வரிதரு வனமுலை மங்கையோ டொருபகல் அமர்ந்தபிரான்விரிதரு துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்துதிரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார்வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்இந் நீள்வரையைக்கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினைக் கீழ்ப்படுத்தார்பூண்டநூல் மார்பினர் அரிவையோ டொருபகல் அமர்ந்தபிரான்வேண்டிடந் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
நீண்டு இலங்கு—அவிர் ஒளி நெடு முடி அரக்கன்—”இந் நீள்வரையைக்கீண்டு இடந்திடுவன்” என்று எழுந்தவன்— ஆள்வினை கீழ்ப்படுத்தார்பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

கரைகடல் அரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனுங்குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்விரைகமழ் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
கரைகடல் அரவு அணைக் கடவுளும், தாமரை நான்முகனும்,குரை கழல் அடி தொழ, கூர் எரி என நிறம் கொண்ட பிரான்,வரை கெழு மகளொடும் பகல் இடம் புகல் இடம், வண்பொழில் சூழ்விரை கமழ் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

அயமுக வெயினிலை அமணருங் குண்டருஞ் சாக்கியரும்நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்கயலன வரிநெடுங் கண்ணியோ டொருபகல் அமர்ந்தபிரான்வியனகர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
சொற்பிரிப்பு
அயம் முகம் வெயில் நிலை அமணரும், குண்டரும்,சாக்கியரும்,நயம் முக உரையினர்; நகுவன சரிதைகள் செய்து உழல்வார்கயல் அன வரி நெடுங்கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,வியல் நகர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

விண்ணுலாம் விரிபொழில் விரைமணல் துருத்திவேள் விக்குடியும்ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோ டுறைபதியைநண்ணுலாம் புகலியுள் அருமறை ஞானசம் பந்தன்சொன்னபண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே.
சொற்பிரிப்பு
விண் உலாம் விரி பொழில் விரை மணல்— துருத்தி, வேள்விக்குடியும்,ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவை யோடு உறை பதியைநண் உலாம் புகலியுள் அருமறை ஞான சம்பந்தன் சொன்னபண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்