திருமுறை 3 · 3.087 · 11

திருச்சிற்றம்பலம்

திருநள்ளாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
நள்ளாறு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமேமிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

போதமர் தருபுரி குழலெழின் மலைமகள் பூணணிசீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமேமீதம தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
போது அமர்தரு புரிகுழல் எழில் மலைமகள் பூண் அணிசீதம் அது அணிதரு முகிழ் இள வனமுலை செறிதலின்,நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர் தம் நாமமே,மீ தமது எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி யெழில்வடங்கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்நட்டுறு செறிவயல் மருவுநள் ளாறர்தந் நாமமேஇட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்கட்டு உறு கதிர் இளவனமுலை இணையொடு கலவலின்,நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர் தம் நாமமே;இட்டு உறும் எரியினில் இடில், இவை பழுது இலை;`மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

மைச்சணி வரியரி நயனிதொன் மலைமகள் பயனுறுகச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்நச்சணி மிடறுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமேமெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறுகச்சு அணி கதிர் இளவனமுலை அவையொடு கலவலின்,நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,மெச்சு அணி எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருமணி யணிநிறக்கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமேவிண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
பண் இயல் மலைமகள் கதிர் விடு பரு மணி அணி நிறக்கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்,நண்ணிய குளிர்புனல் புகுதும் நள்ளாறர் தம் நாமமே,விண் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணிசூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்தாதுறு நிறமுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமேமீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
போது உறு புரிகுழல் மலைமகள் இள வளர் பொன் அணிசூது உறு தளிர் நிற வனமுலை அவையொடு துதைதலின்,தாது உறு நிறம் உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,மீது உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவினுறுசீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமேஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
கார் மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவின் உறுசீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்,தார் மலி நகுதலை உடைய நள்ளாறர் தம் நாமமே,ஏர் மலி எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகுபொன்னியல் மணியணி கலசம தனமுலை புணர்தலின்தன்னியல் தசமுகன் நெறியநள் ளாறர்தந் நாமமேமின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகுபொன் இயல் மணி அணி கலசம் அது அன முலைபுணர்தலின்,தன் இயல் தசமுகன் நெறிய, நள்ளாறர் தம் நாமமே,மின் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

கான்முக மயிலியன் மலைமகள் கதிர்விடு கனமிகுபான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்நான்முகன் அரியறி வரியநள் ளாறர்தந் நாமமேமேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர் விடு கனம் மிகுபால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின்,நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர் தம் நாமமே,மேல் முக எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறு மதிசயச்சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமேமெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசயச்சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்,புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர் தம் நாமமே,மெய்த்திரள் எரியினில் இடில்,இவை பழுதுஇலை;மெய்ம்மையே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

சிற்றிடை அரிவைதன் வனமுலை யிணையொடு செறிதருநற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தனகொற்றவன் எதிரிடை யெரியினி லிடஇவை கூறியசொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் தூயரே.
சொற்பிரிப்பு
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறிதரும்நல்—திறம் உறு, கழுமல நகர் ஞானசம்பந்தனகொற்றவன் எதிர் இடை எரியினில் இட, இவை கூறியசொல்—தெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர்; தூயரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்