திருமுறை 3 · 3.084 · 11

திருச்சிற்றம்பலம்

திருப்புறவம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
சீர்காழி - 08-புறவம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதிபுண்ணிய மறையவர் நிறைபுக ழொலிமலி புறவமே.
சொற்பிரிப்பு
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்நண்ணிய பிணி கெட அருள் புரிபவர், நணுகு உயர் பதிபுண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்அக்குடை வடமுமொர் அரவமு மலரரை மிசையினில்திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.
சொற்பிரிப்பு
கொக்கு உடை இறகொடு பிறை யொடு குளிர்சடை முடியினர்அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொருபங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்தங்கிய கரதல முடையவர் விடையவர் உறைபதிபொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.
சொற்பிரிப்பு
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதிபொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியைமேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவருபோதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே.
சொற்பிரிப்பு
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வருபோதக உரி—அதள் மருவினர்; உறை பதி—புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதிஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழுபூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.
சொற்பிரிப்பு
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்தூமம் அது உற விறல் சுடர் கொளு விய இறை தொகு பதிஓமமொடு உயர்மறை, பிற இய வகைதனொடு, ஒளி, கெழுபூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி பேணிடமுன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதிபுன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே.
சொற்பிரிப்பு
சொல்—நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதிபுன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்எரிதரு முருவினர் இமையவர் தொழுவதொ ரியல்பினர்புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே.
சொற்பிரிப்பு
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுறஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடிபொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே.
சொற்பிரிப்பு
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உறஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடிபொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.
சொற்பிரிப்பு
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதிபூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே.
சொற்பிரிப்பு
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனைவேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.
சொற்பிரிப்பு
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்