திருமுறை 3 · 3.069 · 11

திருச்சிற்றம்பலம்

திருக்காளத்தி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
காளத்தி
நாடு
தொண்டைநாடு

1

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந்தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற்கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில்ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

முதுசினவில் அவுணர்புரம் மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்எதிரெதிர வெதிர்பிணைய எழுபொறிகள் சிதறஎழி லேனமுழுதகதிர்மணியின் வளரொளிகள் இருளகல நிலவுகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரி செய்சதுரர், மதி பொதி சடையர், சங்கரர், விரும்பும் மலைதன்னை வினவில்எதிர் எதிர வெதிர் பிணைய, எழு பொறிகள் சிதற, எழில் ஏனம் உழுதகதிர் மணியின் வளர் ஒளிகள், இருள் அகல நிலவு காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாரகனைநீகொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்பல்பல இருங்கனி *பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க்கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.( * பருகி எனச்சொல்வது விகாரவகையாற் பருங்கியென நின்றது.)
சொற்பிரிப்பு
வல்லை வரு காளியை வகுத்து, “வலி ஆகி மிகு தாருகனை நீகொல்!” என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம்ஆய்,கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறிசடைமேற்தூயமதி சூடிசுடு காடில்நட மாடிமலை தன்னைவினவில்வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல ராகுநயனங்காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி, சடைமேல்தூய மதி சூடி, சுடுகாடில் நடம் ஆடி, மலை தன்னை வினவில்வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும்நயனம்காய் கணையினால் இடந்து, ஈசன் அடி கூடு காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபோலலறக்கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி யிழியவயல் நிலவுமுதுவேய்கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
மலையின் மிசை தனில் முகில் போல் வருவது ஒரு மதகரியை மழை போல் அலறக்கொலை செய்து, உமை அஞ்ச, உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்அலை கொள் புனல் அருவி பலசுனைகள் வழி இழிய, அயல்நிலவு முது வேய்கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்றபணிகண்டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றஅரன் மலையைவினவில்வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்தவிறகிற்காரகில் இரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டுஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த விறகில்கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

ஆருமெதி ராதவலி யாகியச லந்தரனை ஆழியதனால்ஈரும்வகை செய்தருள் புரிந்தவன் இருந்தமலை தன்னைவினவில்ஊரும்அர வம்மொளிகொள் மாமணியு மிழ்ந்தவையு லாவிவரலாற்காரிருள் கடிந்துகன கம்மெனவி ளங்குகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில்ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்,கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்குகாளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

எரியனைய சுரிமயிர் இராவணனை யீடழிய எழில்கொள்விரலாற்பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடுவரை யூடுவரலாற்கரியினொடு வரியுழுவை அரியினமும் வெருவுகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள் விரலால்,பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்,கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென இகலுமிருவர்தனதுருவம் அறிவரிய சகலசிவன் மேவுமலை தன்னைவினவிற்புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரும ணம்புணரும்நாள்கனகமென மலர்களணி வேங்கைகள் நிலாவுகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
“இனது அளவில், இவனது அடி இணையும், முடி, அறிதும்” என இகலும்இருவர்தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலைதன்னை வினவில்புனவர் புனமயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாளகனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவிற்குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே.
சொற்பிரிப்பு
நின்று கவளம் பல கொள் கையரொடு, மெய்யில் இடுபோர்வையவரும்,நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி,கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்திமலையே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையைமாடமொடு மாளிகைகள் நீடுவளர் கொச்சைவயம் மன்னுதலைவன்நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்பாடலொடு பாடுமிசை வல்லவர்கள் நல்லர்பர லோகமெளிதே.
சொற்பிரிப்பு
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவுகாளத்திமலையை,மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்-நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்— உரை நல்ல தமிழின்பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம் எளிதே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்