திருமுறை 3 · 3.051 · 11

திருச்சிற்றம்பலம்

திருஆலவாய்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
ஆலவாய் (மதுரை)
நாடு
பாண்டியநாடு

1

செய்ய னேதிரு ஆலவாய் மேவியஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்பைய வேசென்று பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவியஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

சித்த னேதிரு ஆலவாய் மேவியஅத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனைஎத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
சித்தனே! திரு ஆலவாய் மேவியஅத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனைஎக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்பக்க மேசென்று பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

சிட்ட னேதிரு ஆலவாய் மேவியஅட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
சிட்டனே! திரு ஆலவாய் மேவியஅட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனைஎண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;எண் இலா அமணர் கொளுவும் சுடர்பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலேவஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
“தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்கங்கு லார்அமண் கையரிடுங் கனல்பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
செங்கண் வெள்விடை யாய்! திரு ஆலவாய்அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;கங்குலார் அமண்கையர் இடும் கனல்,பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனைஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

தாவி னான்அயன் தானறி யாவகைமேவி னாய்திரு ஆலவா யாயருள்தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
தாவினான், அயன் தான் அறியா வகைமேவினாய்! திரு ஆலவாயாய், அருள்தூ இலா அமணர் கொளுவும் சுடர்பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவியஅண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.
சொற்பிரிப்பு
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவியஅண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

அப்பன் ஆலவா யாதி யருளினால்வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.
சொற்பிரிப்பு
அப்பன்—ஆலவாய் ஆதி அருளினால்,வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்குஒப்ப, ஞானசம் பந்தன் உரைபத்தும்,செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்