திருமுறை 3 · 3.043 · 11

திருச்சிற்றம்பலம்

சீகாழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சந்த மார்முலை யாள்தன கூறனார்வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.
சொற்பிரிப்பு
சந்தம் ஆர் முலையாள்தன கூறனார்வெந்த வெண்பொடிஆடிய மெய்யனார்கந்தம் ஆர் பொழில்சூழ்தரு காழியுள்எந்தையார், அடிஎன் மனத்து உள்ளவே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்தேனி டங்கொளுங் கொன்றையந் தாரினார்கானி டங்கொளுந் தண்வயற் காழியார்ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே.
சொற்பிரிப்பு
மான் இடம்(ம்) உடையார்,வளர் செஞ்சடைத்தேன் இடம் கொளும்கொன்றை அம் தாரினார்கான் இடம் கொளும்தண்வயல் காழியார்ஊன் இடம் கொண்டுஎன் உச்சியில் நிற்பரே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்பைகொள் வாளர வாட்டும் படிறனார்கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே.
சொற்பிரிப்பு
மை கொள் கண்டத்தர்,வான்மதிச் சென்னியர்பை கொள் வாள் அரவுஆட்டும் படிறனார்கை கொள் மான்மறியார்,கடல் காழியுள்ஐயன், அந்தணர்போற்ற இருக்குமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

புற்றின் நாகமும் பூளையும் வன்னியுங்கற்றை வார்சடை வைத்தவர் காழியுட்பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்உற்ற போதுடன் ஏத்தி யுணருமே.
சொற்பிரிப்பு
புற்றின் நாகமும்பூளையும் வன்னியும்கற்றை வார்சடைவைத்தவர், காழியுளள்பொற்றொடியோடுஇருந்தவர், பொன்கழல்,உற்றபோது, உடன்ஏத்தி உணருமே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

நலியுங் குற்றமும் நம்முட னோய்வினைமெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்யகலிக டிந்தகை யார்கடற் காழியுள்அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.
சொற்பிரிப்பு
நலியும் குற்றமும், நம்உடல் நோய்வினை,மெலியும் ஆறு அதுவேண்டுதிரேல், வெய்யகலி கடிந்த கையார்,கடல் காழியுள்அலை கொள் செஞ்சடையார்,அடி போற்றுமே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

பெண்ணொர் கூறினர் பேயுடன் ஆடுவர்பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்அண்ண லாய அடிகள் சரிதையே.
சொற்பிரிப்பு
பெண் ஒர் கூறினர்;பேய் உடன் ஆடுவர்பண்ணும் ஏத்து இசைபாடிய வேடத்தர்;கண்ணும் மூன்று உடையார்கடல் காழியுள்அண்ணல் ஆயஅடிகள் சரிதையே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

பற்று மானும் மழுவும் அழகுறமுற்று மூர்திரிந் துபலி முன்னுவர்கற்ற மாநன் மறையவர் காழியுட்பெற்றம் ஏற துகந்தார் பெருமையே.
சொற்பிரிப்பு
பற்றும் மானும்மழுவும் அழகு உற,முற்றும் ஊர் திரிந்து,பலி முன்னுவர்கற்ற மா நல்மறையவர் காழியுள்பெற்றம் ஏறு அதுஉகந்தார் பெருமையே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

எடுத்த வல்லரக் கன்முடி தோளிறஅடர்த்து கந்தருள் செய்தவர் காழியுள்கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புறஇடத்து மாதொடு தாமும் இருப்பரே.
சொற்பிரிப்பு
எடுத்த வல் அரக்கன்முடிதோள் இறஅடர்த்து, உகந்துஅருள் செய்தவர் காழியுள்கொடித் தயங்கு நன்கோயிலுள், இன்புஉற,இடத்து மாதொடுதாமும் இருப்பரே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

காலன் தன்னுயிர் வீட்டு கழலடிமாலு நான்முகன் தானும் வனப்புறஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலாச்சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.
சொற்பிரிப்பு
காலன் தன் உயிர்வீட்டு, கழல் அடி,மாலும் நான் முகன்தானும், வனப்பு உறஓலம் இட்டு, முன்தேடி, உணர்கிலாச்சீலம் கொண்டவன்ஊர் திகழ் காழியே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

உருவ நீத்தவர் தாமும் உறுதுவர்தருவ லாடையி னாருந் தகவிலர்கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்ஒருவன் சேவடி யேயடைந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
உருவம் நீத்தவர்தாமும், உறு துவர்தரு வல் ஆடையினாரும், தகவு இலர்;கருமம் வேண்டுதிரேல்,கடல் காழியுள்ஒருவன் சேவடியேஅடைந்து, உய்ம்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

கானல் வந்துல வுங்கடற் காழியுள்ஈன மில்லி இணையடி யேத்திடும்ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.
சொற்பிரிப்பு
கானல் வந்து உலவும்கடல் காழியுள்ஈனம் இ(ல்)லிஇணை அடி ஏத்திடும்ஞானசம்பந்தன்சொல்லிய நல்—தமிழ்,மானம் ஆக்கும்,மகிழ்ந்து உரைசெய்யவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்