திருமுறை 3 · 3.039 · 11

திருச்சிற்றம்பலம்

திருஆலவாய்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
ஆலவாய் (மதுரை)
நாடு
பாண்டியநாடு

1

மானின்நேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்பானல்வாயொரு பாலனீங்கிவன் என்றுநீபரி வெய்திடேல்ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர்ஈனர்கட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்“பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்!ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்ஈனர்கட்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன்நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமாமாகதக்கரி போல்திரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்ஆகதர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு பக்கமா,மா கதக்கரி போல்—திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்ஆகதர்க்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

அத்தகுபொருள் உண்டுமில்லையு மென்றுநின்றவர்க் கச்சமாஒத்தொவ்வாமை மொழிந்துவாதில் அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள்வெட்குற நக்கமேசித்திரர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
அத் தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா,ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப்பெயர்ச்சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்கு உற நக்கம் ஏய்,சித்திரர்க்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

சந்துசேனனும் இந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்கந்துசேனனுங் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளாமந்திபோல்திரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலாஅந்தகர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை சேர்கந்துசேனனும், கனகசேனனும், முதல் அது ஆகிய பெயர் கொளாமந்தி போல்—திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலாஅந்தகர்க்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

கூட்டினார்கிளி யின்விருத்தம் உரைத்ததோரொலி யின்தொழிற்பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும் எக்கர்தங்களைப் பல்லறங்காட்டியேவரு மாடெலாங்கவர் கையரைக்கசி வொன்றிலாச்சேட்டைகட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது ஓர் எலியின் தொழில்,பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல்அறம்காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று இலாச்சேட்டை கட்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியுங் குமணமாசுனகநந்தியுங் குனகநந்தியுந் திவணநந்தியும் மொழிகொளாஅனகநந்தியர் மதுவொழிந்தவ மேதவம்புரி வோமெனுஞ்சினகருக்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மாசுனகநந்தியும், குனகநந்தியும், திவணநந்தியும் மொழி கொளாஅனகநந்தியர், “மது ஒழிந்து அவமே தவம் புரிவோம்” எனும்சினகருக்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பந்தணம்மவை யொன்றிலம்பரி வொன்றிலம்மென வாசகமந்தணம்பல பேசிமாசறு சீர்மையின்றிய நாயமேஅந்தணம்மரு கந்தணம்மதி புத்தணம்மது சித்தணச்சிந்தணர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
“பந்தணம்(ம்) அவை ஒன்று இலம்; பரிவு ஒன்று இலம்(ம்)!”என வாசகம்மந்தணம் பல பேசி, மாசு அறு சீர்மை இன்றி அநாயமே,அந்தணம்(ம்), அருகந்தணம், மதி புத்தணம், மதிசிந்தணச்சிந்தணர்க்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

மேலெனக்கெதி ரில்லையென்ற அரக்கனார்மிகை செற்றதீப்போலியைப்பணி யக்கிலாதொரு பொய்த்தவங்கொடு குண்டிகைபீலிகைக்கொடு பாயிடுக்கி நடுக்கியேபிறர் பின்செலுஞ்சீலிகட்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
“மேல் எனக்கு எதிர் இல்லை” என்ற அரக்கனார் மிகை செற்ற தீப்போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு, குண்டிகைபீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்சீலிகட்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

பூமகற்கும் அரிக்குமோர்வரு புண்ணியன்னடி போற்றிலார்சாமவத்தையி னார்கள்போல்தலை யைப்பறித்தொரு பொய்த்தவம்வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி யட்டிவாய்சக திக்குநேர்ஆமவர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன் அடி போற்றிலார்சாம் அவத்தையினார்கள் போல் தலையைப் பறித்து, ஒரு பொய்த்தவம்வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய் சகதிக்கு நேர்ஆம் அவர்க்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

தங்களுக்குமச் சாக்கியர்க்குந் தரிப்பொணாதநற் சேவடிஎங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக் கேமடுத்தொரு பொய்த்தவம்பொங்குநூல்வழி யன்றியேபுல வோர்களைப்பழிக் கும்பொலாஅங்கதர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
சொற்பிரிப்பு
தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடிஎங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து, ஒரு பொய்த் தவம்பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலாஅங்கதர்க்கு எளியேன் அலேன்—திரு ஆலவாய் அரன் நிற்கவே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

எக்கராம்அமண் கையருக்கெளி யேனலேன்திரு ஆலவாய்ச்சொக்கனென்னு ளிருக்கவேதுளங் கும்முடித்தென்னன் முன்னிவைதக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ் நாதன்ஞானசம் பந்தன்வாய்ஒக்கவேயுரை செய்தபத்தும் உரைப்பவர்க்கிடர் இல்லையே.
சொற்பிரிப்பு
“எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு ஆலவாய்ச்சொக்கன் என் உள் இருக்கவே”, துளங்கும் முடித் தென்னன்முன், இவைதக்க சீர்ப் புகலிக்கு மன்—தமிழ் நாதன், ஞானசம்பந்தன்—வாய்ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்