திருமுறை 3 · 3.031 · 11

திருச்சிற்றம்பலம்

திருமயேந்திரப்பள்ளி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
மயேந்திரப்பள்ளி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்அரவரை அழகனை அடியிணை பணிமினே.
சொற்பிரிப்பு
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்ளியுள்அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகைகண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.
சொற்பிரிப்பு
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர் மாளிகை,கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்ளியுள்செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே!
உரை

உரை எழுதப்படவில்லை

3

கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமுமாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்ஆங்கிருந் தவன்கழல் அடியிணை பணிமினே.
சொற்பிரிப்பு
கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும்,தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும்,மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள்ளியுள்ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே!
உரை

உரை எழுதப்படவில்லை

4

வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகுசங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே.
சொற்பிரிப்பு
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகுசங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும்மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப்பள்ளியுள்எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.
சொற்பிரிப்பு
நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச்சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன்,மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப்பள்ளியுள்கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-மந்திரமறை வளர் மயேந்திரப்பள்ளியுள்அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

7

சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபடநடம்நவில் புரிவினன் நறவணி மலரொடுபடர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபடநடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடுபடர்சடை மதியினன், மயேந்திரப்பள்ளியுள்அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக்கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன்,மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப்பள்ளியுள்அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.
சொற்பிரிப்பு
நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன்,ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்;மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள்யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்துஉய்ம்மினே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்இடமுடை ஈசனை இணையடி பணிமினே.
சொற்பிரிப்பு
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள்இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.
சொற்பிரிப்பு
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,“நம் பரம் இது” என, நாவினால் நவில்பவர்உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்