திருமுறை 3 · 3.027 · 11

திருச்சிற்றம்பலம்

திருச்சக்கரப்பள்ளி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கொல்லி
தலம்
சக்கரப்பள்ளி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரைஉடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
படையினார், வெண்மழு;பாய் புலித்தோல் அரைஉடையினார்; உமை ஒருகூறனார்; ஊர்வது ஓர்விடையினார்; வெண்பொடிப்பூசியார்; விரிபுனல்சடையினார்; உறைவு இடம்சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
பாடினார், அருமறை;பனிமதி சடைமிசைச்சூடினார், படுதலைதுன் எருக்கு அதனொடும்;நாடினார், இடு பலி;நண்ணி ஓர் காலனைச்சாடினார்; வள நகர்சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந்துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறைதன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
மின்னின் ஆர் சடைமிசைவிரி கதிர் மதியமும்,பொன்னின் ஆர் கொன்றையும்,பொறி கிளர் அரவமும்,துன்னினார்; உலகு எலாம்தொழுது எழ நால்மறைதன்னினார்; வள நகர்சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறைமலர்மலி சலமொடு வந்திழி காவிரிசலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
நலம் மலி கொள்கையார், நால்மறை பாடலார்வலம் மலி மழுவினார், மகிழும் ஊர் வண்டு அறைமலர் மலி சலமொடு வந்து இழி காவிரிசலசல மணி கொழி சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

5

வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்கந்தமார் மலரொடு காரகில் பன்மணிசந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
வெந்த வெண் பொடி அணிவேதியர், விரிபுனல்,அந்தம் இல் அணி மலைமங்கையோடு, அமரும் ஊர்கந்தம் ஆர் மலரொடு,கார் அகில், பல்மணி,சந்தினோடு, அணைபுனல் சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

6

பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலைவாங்கினார் வானவர் தானவர் வணங்கிடஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
பாங்கினால் முப்புரம்பாழ்பட வெஞ்சிலைவாங்கினார், வானவர்தானவர் வணங்கிடஓங்கினார், உமை ஒருகூறொடும் ஒலி புனல்தாங்கினார், உறைவு இடம்சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலிநீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
பாரினார் தொழுது எழுபரவு பல் ஆயிரம்-பேரினார்; பெண் ஒருகூறனார்; பேர் ஒலி-நீரினார், சடைமுடி;நிரை மலர்க்கொன்றை அம்-தாரினார்; வள நகர்சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

8

முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டியசதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
முதிர் இலா வெண்பிறைசூடினார்; முன்ன நாளஎதிர் இலா முப்புரம்எரிசெய்தார், வரைதனால்;அதிர் இலா வல் அரக்கன்வலி வாட்டியசதிரினார்; வள நகர்சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர்பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்மணிவண னவனொடு மலர்மிசை யானையுந்தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
துணி படு கோவணம், சுண்ணவெண் பொடியினர்பணி படு மார்பினர்,பனிமதிச் சடையினர்,மணிவணன் அவனொடுமலர் மிசையானையும்தணிவினர், வள நகர்சக்கரப்பள்ளியே.
உரை

உரை எழுதப்படவில்லை

10

உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.
சொற்பிரிப்பு
உடம்பு போர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள்விடம் படும் உரை அவைமெய் அல; விரிபுனல்வடம் படு மலர்கொடுவணங்குமின், வைகலும்,தடம் புனல் சூழ்தருசக்கரப்பள்ளியே!
உரை

உரை எழுதப்படவில்லை

11

தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெங்கண்ணுத லவனடி கழுமல வளநகர்நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.
சொற்பிரிப்பு
தண்வயல் புடை அணிசக்கரப்பள்ளி எம்கண் நுதலவன் அடி,கழுமல வள நகர்நண்ணிய செந்தமிழ்ஞானசம்பந்தன் சொல்பண்ணிய இவை சொல,பறையும், மெய்ப் பாவமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்