திருமுறை 3 · 3.018 · 11

திருச்சிற்றம்பலம்

திருவைகல்மாடக்கோயில்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
வைகல்மாடக்கோயில்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

துளமதி யுடைமறி தோன்று கையினர்இளமதி யணிசடை எந்தை யாரிடம்உளமதி யுடையவர் வைக லோங்கியவளமதி தடவிய மாடக் கோயிலே.
சொற்பிரிப்பு
"துள மதி உடை மறி தோன்று கையினர்இளமதி அணி சடை எந்தையார், இடம்உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,வள மதி தடவிய, மாடக்கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

2

மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்மையகண் மலைமக ளோடும் வைகிடம்வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச்செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.
சொற்பிரிப்பு
"மெய் அகம் மிளிரும் வெண்நூலர், வேதியர்மைய கண் மலைமகளோடும் வைகு இடம்வையகம் மகிழ்தர, வைகல் மேல்—திசைசெய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

3

கணியணி மலர்கொடு காலை மாலையும்பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்தணியணி உமையொடு தாமுந் தங்கிடம்மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.
சொற்பிரிப்பு
"கணி அணி மலர்கொடு, காலை மாலையும்பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர்,தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

4

கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.
சொற்பிரிப்பு
"கொம்பு இயல் கோதை முன் அஞ்ச, குஞ்சரத்-தும்பி அது உரி செய்த துங்கர் தங்கு இடம்வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல்—திசை,செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

5

விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்மடமொழி மலைமக ளோடும் வைகிடம்மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்குடதிசை நிலவிய மாடக் கோயிலே.
சொற்பிரிப்பு
"விடம் அடை மிடற்றினர், வேத நாவினர்மடமொழி மலைமகளோடும் வைகு இடம்மட அனம் நடை பயில் வைகல் மா நகர்க்குட திசை நிலவிய மாடக்கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

6

நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடைஇறையவ ருறைவிடம் இலங்கு மூவெரிமறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.
சொற்பிரிப்பு
"நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடைஇறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரிமறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்,திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

7

எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசைவருமுகி லணவிய மாடக் கோயிலே.
சொற்பிரிப்பு
"எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன்திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம்வரி வளையவர் பயில் வைகல் மேல்—திசை,வரு முகில் அணவிய மாடக்கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

8

மலையன இருபது தோளி னான்வலிதொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்வலம்வரு மலையன மாடக் கோயிலே.
சொற்பிரிப்பு
"மலை அன இருபது தோளினான் வலிதொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்வலம் வரு மலை அன மாடக்கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

9

மாலவன் மலரவன் நேடி மால்கொளமாலெரி யாகிய வரதர் வைகிடம்மாலைகொ டணிமறை வாணர் வைகலில்மாலன மணியணி மாடக் கோயிலே.
சொற்பிரிப்பு
"மாலவன், மலரவன், நேடி மால் கொளமால் எரி ஆகிய வரதர் வைகு இடம்மாலைகொடு அணி மறைவாணர் வைகலில்,மால் அன மணி அணி மாடக்கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

10

கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்வடமலை யனையநன் மாடக் கோயிலே.
சொற்பிரிப்பு
"கடு உடை வாயினர், கஞ்சி வாயினர்பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்வடமலை அனைய நல் மாடக்கோயிலே."
உரை

உரை எழுதப்படவில்லை

11

மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவைசிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.
சொற்பிரிப்பு
"மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலைச்சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்-பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவைசிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே."
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்