திருமுறை 3 · 3.015 · 11

திருச்சிற்றம்பலம்

திருவெண்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
வெண்காடு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மந்திர மறையவை வான வரொடும்இந்திரன் வழிபட நின்ற எம்மிறைவெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவியஅந்தமு முதலுடை அடிக ளல்லரே.
சொற்பிரிப்பு
மந்திர மறையவர், வானவரொடும்,இந்திரன், வழிபட நின்ற எம் இறை;வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!
உரை

உரை எழுதப்படவில்லை

2

படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்விடையுடைக் கொடியர்வெண் காடு மேவியசடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே.
சொற்பிரிப்பு
"படை உடை மழுவினர், பாய் புலித்தோலின்உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்,விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய,சடை இடைப் புனல் வைத்த, சதுரர் அல்லரே!"
உரை

உரை எழுதப்படவில்லை

3

பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்மேலவர் பரவுவெண் காடு மேவியஆலம தமர்ந்தஎம் அடிக ளல்லரே.
சொற்பிரிப்பு
"பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்தோலொடு நூல்—இழை துதைந்த மார்பினர்மேலவர் பரவு வெண்காடு மேவிய,ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!"
உரை

உரை எழுதப்படவில்லை

4

ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் புன்னையுந்தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்வேழம துரித்தவெண் காடு மேவியயாழின திசையுடை இறைவ ரல்லரே.
சொற்பிரிப்பு
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப்புன்னையும்தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்,வேழம் அது உரித்த, வெண்காடு மேவிய,யாழினது இசை உடை, இறைவர் அல்லரே!
உரை

உரை எழுதப்படவில்லை

5

பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்மிறைவேதங்கள் முதல்வர்வெண் காடு மேவியபாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே.
சொற்பிரிப்பு
பூதங்கள் பல உடைப் புனிதர், புண்ணியர்ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை,வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய,பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே!
உரை

உரை எழுதப்படவில்லை

6

மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறைவிண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவியஅண்ணலை அடிதொழ அல்ல லில்லையே.
சொற்பிரிப்பு
மண்ணவர் விண்ணவர் வணங்க, வைகலும்எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறைவிண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவியஅண்ணலை அடி தொழ, அல்லல் இல்லையே.
உரை

உரை எழுதப்படவில்லை

7

நயந்தவர்க் கருள்பல நல்கி இந்திரன்கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்வியந்தவர் பரவுவெண் காடு மேவியபயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே.
சொற்பிரிப்பு
நயந்தவர்க்கு அருள் பல நல்கி, இந்திரன்கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்வியந்தவர் பரவு வெண்காடு மேவிய,பயம் தரு மழு உடை, பரமர் அல்லரே!
உரை

உரை எழுதப்படவில்லை

8

மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடிதலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர்விலையுடை நீற்றர்வெண் காடு மேவியஅலையுடைப் புனல்வைத்த அடிக ளல்லரே.
சொற்பிரிப்பு
மலை உடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடிதலை உடன் நெரித்து, அருள் செய்த சங்கரர்;விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய,அலை உடைப் புனல் வைத்த, அடிகள் அல்லரே!
உரை

உரை எழுதப்படவில்லை

9

ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார்வேடம துடையவெண் காடு மேவியஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே.
சொற்பிரிப்பு
ஏடு அவிழ் நறுமலர் அயனும் மாலும் ஆய்த்தேடவும், தெரிந்து அவர் தேரகிற்கிலார்வேதம் அது உடைய வெண்காடு மேவிய,ஆடலை அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!
உரை

உரை எழுதப்படவில்லை

10

போதியர் பிண்டியர் பொருத்த மில்லிகள்நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்வேதியர் பரவுவெண் காடு மேவியஆதியை யடிதொழ அல்ல லில்லையே.
சொற்பிரிப்பு
போதியர், பிண்டியர், பொருத்தம் இ(ல்)லிகள்நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்வேதியர் பரவ வெண்காடு மேவியஆதியை அடி தொழ, அல்லல் இல்லையே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற்சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.
சொற்பிரிப்பு
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்,சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்